செல்வங்களை வாரி வழங்கும் மகாலட்சுமி, நம் வீட்டில் குடி கொண்டால் கஷ்டங்கள் தீரும். அப்படியான மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களாக குறிப்பிடப்படுபவற்றில் உப்பும் முக்கிய இடம் வைக்கிறது. உப்புக்கு கெட்ட சக்திகளை விரட்டி வீட்டில் நேர்மறை சக்தியை ஈர்த்துக் கொள்ளும் வல்லமை அதிகம் உண்டு. உப்பை கீழே சிந்து விடக்கூடாது காலில் உப்பை தீண்டக் கூடாது, உப்பை கடனாகவே கொடுக்க கூடாது என பெரியோர்கள் வலியுறுத்துவார்கள்.