இந்த வழிபாட்டினை எந்த கிழமையிலும் எந்த நேரத்திலும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் குறிப்பாக வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் செய்தல் மிகச் சிறப்பு. வீட்டில் உள்ளப் பெண்கள் அல்லது குழந்தைகளின் கைகளால் இந்த வழிபாடு செய்யலாம்.
அதிகாலை எழுந்து சுத்தமாக நீராடி விட்டு பின் பூஜை அறையில் உள்ள ஸ்வாமி படங்களுக்கு மலர்களால் அலங்கரித்து , பின் விளக்கேற்றி ,தீப தூபங்கள் காட்ட வேண்டும். 2 பச்சை ஏலக்காய்களை எடுத்துக் கொண்டு நிலை வாசற்படிக்கு அருகில் சென்று நிலை வாசலின் இரண்டு பக்கங்களிமும் 2 தீபங்கள் ஏற்றி வைத்து விட வேண்டும். பின் விளக்குகளின் அருகே உட்கார்ந்து 2 ஏலக்காய்களை கையில் வைத்து, குல தெய்வம், மஹாலக்ஷ்மி, கிரக லட்சுமி ஆகியோரை நினைத்துக் கொண்டு மனதில் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அஷ்டலட்சுமிகளும் வீட்டிற்குள் வந்து அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கையில் உள்ள ஏலக்காய்களை அப்படியே கொண்டு வந்து பூஜை அறையில் ஒரு சிவப்பு நிறத் துணியில் வைத்து முடிச்சு போட்டு, இதனை பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விட வேண்டும்