கிரகங்கள் அவ்வப்போது நகர்ந்து ராஜயோக நிலையை உருவாக்குகின்றன. கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்குப் பிறகு 2023ஆம் ஆண்டு மகா அஷ்டமி அன்று அதாவது வரும் மார்ச் 28ஆம் தேதி அன்று 5 ராஜயோகங்கள் உருவாகின்றன.
கேதார, ஹம்ஸ, மாளவ்ய, சதுஷ்சக்ரா மற்றும் மஹாபாக்ய ஆகிய 5 ராஜயோகங்களின் சேர்க்கையால், சில ராசிகளுக்கு சுப பலன்கள் உண்டாகும். இந்த யோகம் அவர்களுக்கு பொருளாதார ரீதியாக நன்மை தருவது மட்டுமின்றி, சமூகத்தில் மரியாதையையும் அந்தஸ்தையும் கூட தருகிறது. எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை இங்கு காணலாம்.
மிதுனம் - அதிக மகிழ்ச்சி
இந்த ராசிக்காரர்கள் இந்த ராஜயோகங்களால் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள். இந்த ராசியை சேர்ந்த இளைஞர்கள் வேலை தேடிக்கொண்டிருந்தால் மார்ச் 28ஆம் தேதிக்கு பிறகு நல்ல வேலை தொடர்பான செய்திகள் கிடைக்கும். ஏற்கனவே உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும். சிலருக்கு பதவி உயர்வு கூட வரலாம். இனிமேல் இந்த ராசியினர் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். இந்த ராஜயோகங்களால் இவர்களின் குடும்ப வாழ்வில் அமைதி நிலவும்.
Cancer to Sagittarius-4 Zodiac signs who are jealous of their siblings
கடகம் - அதிர்ஷ்டம்
கடகத்தில் ஹம்ச, மாளவ்ய ராஜயோகம் உருவாகுவது சுபயோகம் ஆகும். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும். தங்கள் வாழ்க்கையில் வெற்றியின் படிகளில் ஏறுவார்கள். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகுகின்றன. இந்த நேரம் மாணவர்களுக்கு அற்புதமான காலம். தொழிலதிபர்கள் பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் உங்கள் வணிகத்திற்கு நல்லதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். உண்மையில் இந்த நேரம் தொழில்முனைவோருக்கு ரொம்ப நல்லது. புதிய முதலீட்டு வழிகளை அடைவார்கள்.
கன்னி - திருமண யோகம்
கன்னி ராசியினருக்கு திருமண யோகம் வருகிறது. திருமணமாகாதவர்களுக்கு இந்த காலகட்டத்தில் திருமண வாய்ப்புகள் ஏற்படும். ஏற்கனவே திருமணமானவர்களுக்கு இந்த காலகட்டத்தில் மனைவி ஆதரவு கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். திருமணம் பந்தத்தில் இணைக்கப்பட்டவர்களுக்கு, மகிழ்ச்சியின் புதிய கதவுகள் திறக்கும். தொழில் செய்பவர்களுக்கு தொழில் வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன.
இதையும் படிங்க: சனி பெயர்ச்சி.. இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகுது.. இவர்களின் காட்டில் பண மழை...!