இந்து சாஸ்திரங்களின்படி வெள்ளிக்கிழமை ரொம்பவும் சிறப்பு வாய்ந்தது. அதனால் தான் வாரம் முழுக்க வீட்டில் விளக்கு ஏற்றாவிட்டாலும் கூட, வெள்ளிக்கிழமையில் விளக்கி ஏற்றி வழிபடும் வழக்கத்தை கண்டிப்பாக வைத்திருப்பார்கள். சிறப்பு வாய்ந்த வெள்ளிக்கிழமையில் சில விஷயங்களை செய்வதால் பணம் தேவைக்கு ஏற்ப நம் கைக்கு வந்து சேரும் என்பது ஐதீகம்.
வெள்ளிக்கிழமை அன்று கல் உப்பு வாங்குவது மகாலட்சுமியின் அருளை பெற்று தரும் என்று ஆச்சார்ய பெருமக்கள் சொல்வார்கள். சாஸ்திரங்கள் கல் உப்பு மட்டுமின்றி, தயிர் வாங்கினாலும் அதிர்ஷ்டம் ஏற்படும் என சொல்கிறது. வெள்ளிக்கிழமையில் அரிசி, நல்லெண்ணெய் வாங்குவதும் சுபமாக கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமை அரிசியை வாங்கலாமே தவிர, அதை அன்றைய தினம் வறுக்கவும், புடைக்கவும் கூடாது.
மொச்சை பயிரை சுக்கிர ஹோரையில் வெள்ளிக்கிழமையில் நாம் வாங்கி வீட்டில் வைத்தால், மகாலட்சுமி நம் வீட்டில் வாசம் செய்வாள் என நம்பப்படுகிறது. மேலும், சுக்கிர ஹோரையில் காலை வேளை அல்லது மாலை வேளையில் மகாலட்சுமிக்கு மொச்சை பயிறு அல்லது பச்சை பயிறு ஏதேனும் ஒன்றில் சுண்டல் செய்து நைவேத்தியம் படைத்து வழிபட்டால் வீட்டில் சுபிட்சம் நிலவும்.
இந்த நைவேத்தியத்தை குடும்பத்தில் இருக்கும் நபர்கள் எல்லோரும் தவறாமல் சாப்பிட வேண்டும். ஒவ்வொரு வெள்ளியும் இந்த மாதிரி மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் பணப்புழக்கம் அதிகமாகும் என நம்பப்படுகிறது. இந்த பயிறு நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதனுடன் மகாலட்சுமியின் அருளையும் நமக்கு பரிபூரணமாக பெற்று தரும். மொச்சை பயிரை வெள்ளி அல்லாத பிற நாட்களில் எளியவர்களுக்கு தானம் செய்யுங்கள். இப்படி செய்தால் நீங்கள் பட்ட துன்பங்கள் ஒழிந்து விடிவு காலம் வரும் என்கிறது ஆன்மீக நூல்கள்.
வெள்ளிக்கிழமை செய்யக் கூடாதவை..!
வெள்ளிக்கிழமை அன்று மருந்து மாத்திரை வாங்குவதை தவிர்த்தல் நலம். இதனால் எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. வெள்ளிக்கிழமை நேர்மறையான சிந்தனைகளை கொண்டிருப்பது தான் நல்லது. வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் உள்ள பெண்கள் அழக்கூடாது என இவர்கள் கூறுவார்கள். ஏனெனில் வெள்ளியன்று அழுவதால் வீட்டில் பணம் தங்காதாம். அன்றையதினம் வீட்டில் அழுகை சத்தம் கேட்பது குடும்பத்திற்கு உகந்தது அல்ல. மருந்து மாத்திரைகளை கூட முந்தைய தினமே வாங்கி வைப்பது நல்லது.
வெள்ளிக்கிழமை அன்று மறந்தும் துணி துவைக்கக் கூடாது. அதைப் போல அன்றைய தினம் எந்த பொருளையும் சுத்தம் செய்யக் கூடாது என்பார்கள். அப்படி செய்தால் கடன் சுமை பெருகும். அதைப் போலவே வெள்ளிக்கிழமை ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளித்தாலோ, முடிவெட்டி, சவரம் செய்தாலோ கடன் பிரச்சனை வருமாம்.
இதையும் படிங்க: நம்மை பிடிக்காதவர்கள் வைக்கும் பில்லி சூனியம் போன்ற தீய வினைகளிலிருந்து தப்பிக்க, கோமாதா வழிபாடு..!