சில நேரங்களில் நம்மால் எவ்வளவு இனிமையாக, புத்திசாலித்தனமாக பேசினாலும், சிலரிடம் நம்முடைய சொற்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நம்முடைய எண்ணம் சரியாக இருந்தாலும், எதிர்ப்பார்த்த நபர் அதை ஏற்கவே மாட்டார். இதுபோன்ற அனுபவம் பலருக்கும் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும். ஒரு வேலை அவசியம் நடக்க வேண்டும் என்ற சூழலில் இருந்தாலும், அந்த வேலையைச் செய்து தருபவர் ஏதோ காரணங்களால் தாமதம் செய்வார். சில சமயம் அரசு அலுவலகங்களில், வங்கிகளில், அனுமதி அலுவலர்களிடம் கூட இதுபோன்ற சிரமங்கள் நிகழும். சில சமயம் நமது குடும்பத்தினரே நம் பேச்சை கேட்கமாட்டார்கள்.
சரியான ஆவணங்கள் இருந்தாலும் கடன் கிடைக்காமல் போகலாம், கட்டிட அனுமதி தாமதமாகலாம், வணிக அனுமதி காத்திருப்பாக மாறலாம். இப்படி நம் பேச்சு எதிர்பார்த்த பலனை தராமல் போனால், மனம் உடைந்துவிடும். ஆனால் இதற்கெல்லாம் ஒரு எளிய ஆன்மீக யுக்தி இருப்பதை பலர் அறியமாட்டார்கள்.