வீட்டின் தரையை தண்ணீரால் கழுவும் போது, அந்த நீரில் சிறிது கல் உப்பு சேர்த்து பயன்படுத்துவது மிகப் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது வீட்டில் தோஷ சக்திகள் நுழையாமல் தடுக்கும். அதேபோல், ஞாயிற்றுக்கிழமையும் அமாவாசை நாளும் கற்பூரம், பூசணிக்காய், எலுமிச்சை, தேங்காய் போன்றவற்றைக் கொண்டு திருஷ்டி சுற்றி வீதியோரத்தில் உடைத்தால், நெகட்டிவ் சக்திகள் விலகும்.
வீட்டில் மூத்தவர்கள் மற்றவர்களுக்குத் திருஷ்டி சுற்றி போடலாம். ஆனால் அந்த பொருட்கள் யாருடைய காலிலும் மிதியாதபடி கவனிக்க வேண்டும். வாரம் ஒருமுறை பூஜையறையில் குங்கிலியம், சாம்பிராணி புகை காட்டி வழிபடுவது தீய சக்திகளை நீக்கும்.