கார்த்திகை மாதத்தில் சோமவார விரதம் இருந்துசிவனை வழிபட்டால், அவரது அருள் உடனடியாகப் பொழியும். வழிபாட்டு முறை சோமவார விரதம் எளிமையானது, ஆனால் உண்மையான பக்தியுடன் செய்ய வேண்டும். அதிகாலை எழுந்து, சுத்தமான உடைகளை அணிந்து, மனதை சுத்தம் செய்யுங்கள். சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை உண்ணாமல் இருங்கள். முழு நோற்க முடியாவிட்டால், ஒரு வேளை உணவு மட்டும் சாப்பிடலாம். காலை அல்லது மாலை சிவன் கோவிலுக்கு சென்று, ஒரு விளக்கு ஏற்றி, உங்கள் பக்தி பாடல்களை பாடுங்கள்.
கோவிலுக்கு செல்ல முடியாவிட்டால், வீட்டில் சிவலிங்கத்திற்கு முன் விளக்கு ஏற்றி, இனிப்பு நைவேத்தியம்அளிக்கவும். குறைந்தபட்சம் ஒரு நபருக்கு உணவு கொடுங்கள். இது விரதத்தின் முக்கிய பகுதி, சிவனின் அருளை பலமடங்கு தரும். வழிபாட்டுக்குப் பின், விரதத்தை முடித்து, சிவ மந்திரம் ("ஓம் நம சிவாய") ஜபம் செய்யுங்கள். இந்த முறையைப் பின்பற்றினால், சிவனின் அன்பு உங்கள் வாழ்க்கையை ஆண்டு விடும்.