Karthigai Deepam 2022 | கார்த்திகை தீப திருநாள்: விரத வழிமுறைகள் மற்றும் தீப பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்!

First Published Dec 5, 2022, 10:26 AM IST

தமிழ் மாதங்களில் ஒன்றான கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நன்நாள் கார்த்திகை தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை தீப திருநாள் நாளை (டிசம்பர் 6ம் தேதி) செவ்வாய் கிழமை கொண்டாப்படுகிறது.
 

Thiruvannamalai Karthigai Deepam

கார்த்திகை திருநாள் என்பதும் நம் நினைவிற்கு வருவது தீப விளக்குகளும், திருவண்ணாமலை தீபமும் தான். முக்தி தரும் தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது. ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை தீபத்திருநாளன்று திருவண்ணாமலை அடிவாரத்தில் பரணி தீபமும், மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

வீடுகளில் எப்போது தீபம் ஏற்ற வேண்டும்?

திருவண்ணாமலையில் முதலில் பரணி தீபம் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து, மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவதை வைத்தே வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும். திருவண்ணாமலையில் மலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். அதன் பிறகு 6.05 மணிக்கு மேல் வீடுகளில் திருவிளக்குகளை ஏற்றி அலங்கரிக்கலாம்.

கார்த்திகை தீபத் திருவிழா! மலை மீது ஏற 2500 பேருக்கு மட்டுமே அனுமதி.. என்னென்ன கட்டுப்பாடுகள்.. முழு விவரம்.!
 

பழைய விளக்குகளை பயன்படுத்தலாமா?

மொத்தமாக பழைய விளக்குகளை பயன்படுத்தாமல், புதிதாக சில விளக்குகளை வாங்கி, அதனோடு பழைய விளக்குகளையும் சேர்த்து விளக்கு ஏற்றலாம். அகல் விளக்குகளை தண்ணீரில் நினைத்து, காயவைத்து மஞ்சள் மற்றும் குங்குமம் தடவி தயார் செய்து கொள்ள வேண்டும்.

விளக்கு ஏற்ற என்ன எண்ணெய் பயன்படுத்த வேண்டும்?

கார்த்திகை தீபத்திருநாளன்று, அகல் விளக்குகளில் பஞ்சு திரியிட்டு, நல்லெண்ணெய் அல்லது பஞ்ச கூட்டு எண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். ஒரேஒரு விளக்காவது நெய் விளக்கு ஏற்றுவது சிறப்பானது.

எத்தனை விளக்குகளை ஏற்ற வேண்டும்?

வீடுகளில் 27 அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். வீட்டு வாசலில் கோலத்தின் மீது தாம்பூலம் அல்லது மனை பலகை வைத்து 5முக குத்துவிளக்கு ஏற்றி வழிபடுவது சிறந்தது.

வீட்டு வாசலில் ஏற்றிய குத்துவிளக்கு முப்பது நிமிடங்கள் எரிந்தால் போதுமானது. பிறகு அதை வீட்டிற்குள் எடுத்து வந்து விடலாம். மற்ற இடங்களில் ஏற்றிய விளக்குகளை தானாக அணைந்து குளிரும் வரை விட்டு விடலாம்.

Karthigai Deepam : டிசம்பர் 6ம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருநாள்! - எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?
 

கார்த்திகை விரதம் தொடங்குவது எப்படி?

கார்த்திகை திருநாளில் விரதம் இருப்பவர்கள் திருவண்ணாமலை அடிவாரத்தில் பரணி தீபம் ஏற்றிய சமயத்தில் இருந்து தங்கள் விரதத்தை துவக்க வேண்டும்

கார்த்திகை விரதம் இருக்கும் முறை என்னென்ன?

கார்த்திகை நன்நாளில் உபவாசம் இருப்பது நல்லது. வயதானவர்கள் அல்லது முழுவதும் சாப்பிடாமல் இருக்க முடியாதவர்கள் பால், பழம் மட்டும் உண்டு விரதம் இருக்கலாம்.

கார்த்திகை ஸ்பெஷல்- "பொரி உருண்டை" நெய்வேத்தியம் செய்வோம் வாங்க!
 

விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்?

கார்த்திகை திருநாள் முழுவதும் விரதம் இருந்து, மாலையில் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். கார்த்திகை பொரி, வெற்றிலை பாக்கு, பழங்கள் நைவேத்தியமாக வைத்து வழிபடுவது சிறந்தது. இரவு விளக்குகளை அணைக்கும் நேரத்தில் நைவேத்தியத்தை உண்டு உபவாசம் மற்றும் மெளன விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.

கார்த்திகை திருநாள் அன்று தித்திப்பான பலாப்பழ பாயசம் செய்து பாருங்கள்!
 

விரதம் இருப்பதால் என்ன பலன்கள் ?

கார்த்திகை தீபத் திருநாளில் விரதமிருந்து சிவ பெருமானை வழிபாடுவது என்பது, நாம் வாழ்வில் எப்படிப்பட்ட துன்பத்தில் இருந்தாலும், எல்லாம் வல்ல சிவ பெருமான் நம்மை அதிலிருந்து காப்பாற்றுவார் என்பது ஐதீகம்.
 

click me!