Weekly Horoscope : இந்த வார ராசி பலன்! (5th to 11th December 2022)

Published : Dec 04, 2022, 07:10 PM IST

Weekly Horoscope 2022 - (5th Dec to 11th Dec 2022) Rasipalan: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இந்த 2022 ஆம் ஆண்டு (டிசம்பர் 5ம் தேதி முதல் டிசம்பர் 11ம் தேதி வரை உள்ள) 12 ராசிகளின் பலன்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.  

PREV
112
Weekly Horoscope : இந்த வார ராசி பலன்! (5th to 11th December 2022)
மேஷம்

இந்த வாரம் நீங்கள் கவலைப்பட வேண்டாம், நீங்கள் கொஞ்சம் உற்சாகமாக இருக்கலாம் மற்றும் சில வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே அமைதியாக இருங்கள் மற்றும் உங்கள் செயல்களை மட்டும் செய்யுங்கள். இந்த வாரம் உங்கள் வழக்கத்தில் மாற்றம் இருக்கும். இதற்கு உங்கள் வீட்டில் நடக்கும் முக்கிய விழா காரணமாக இருக்கலாம். இந்த விழாவில் நீண்ட நாட்களாக சந்திக்க முடியாத உறவினர்களை சந்திப்பீர்கள்.

212
ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள், உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண பொறுமையாக முயற்சி செய்யுங்கள். உங்கள் வீட்டின் பாதுகாப்பிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரம் நீங்கள் உங்கள் மனநிலையில் மாற்றத்தை உணரலாம், காதல் விஷயங்களில் இந்த வாரம் சிறப்பாக இருக்கும். நீங்கள் ஒரு புதிய உறவைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், அதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
 

312
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுகளே, நண்பர்களுக்கு உங்களிடமிருந்து கூடுதல் ஆலோசனை தேவைப்படலாம். யாருக்கும் அறிவுரை வழங்குவதற்கு முன் கவனமாக சிந்தியுங்கள். வேலையுடன் ஓய்வும் அவசியம், அது வாழ்வதற்கும் அவசியம். ஒரு பயணம் அல்லது விருந்துக்கு திட்டமிடுங்கள் மற்றும் இந்த சிறப்பு தருணங்களை அனுபவிக்க உதவும். மாணவர்களுக்கு இந்த வாரம் அவர்களுக்கு முன்னேற்றமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு வாரத் தொடக்கத்தில் முயற்சிகள் சற்று குறையலாம்.
 

412
கடகம்

கடக ராசிக்காரர்களுகளே, நீங்கள் உங்கள் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்த வாரம் உங்கள் வேலையை ஒதுக்கிவிட்டு உங்கள் வெற்றிகளை கொண்டாடுங்கள். பண விஷயத்தில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். இந்த வாரம் உங்களுக்கும் உங்கள் காதலருக்கும் இடையே ஈகோ மோதல் ஏற்படலாம். உங்கள் பெற்றோரின் எண்ணங்கள் உங்கள் காதல் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தும்.
 

512
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் வெற்றிக்கான மற்றொரு படி அடியெடுத்து வைப்பீர்கள். இந்த வாரம் நீங்கள் எதையாவது சாதிப்பதற்கான முயற்சியை கையில் எடுப்பீர்கள். இந்த வாரம் சந்திரனின் நிலை உங்களுக்கு அதிக வலிமையையும் உற்சாகத்தையும் தரும், இது எதிர்மறையான சூழ்நிலைகளுக்கு எதிராக போராட உங்களுக்கு தைரியத்தைத் தரும். இதுவரை செய்த கடின உழைப்பின் பலனைப் பெறப் போகிறீர்கள். இது பொறுமையாக இருக்க வேண்டிய நேரம், பீதி அடைய வேண்டாம்.
 

612
கன்னி

கன்னி ராசி நேயர்களே, சிறுசிறு சச்சரவுகள் நீடித்தாலும் வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் திருப்தி அடைவீர்கள். புதிய வீடு கட்டுவது பற்றி யோசிக்கலாம். இந்த நேரத்தில் உங்கள் துணையுடன் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி உங்களுக்கு தகராறு ஏற்படலாம். உங்கள் சக ஊழியர்களைப் பற்றிய வதந்திகளைப் புறக்கணிக்கவும். இந்த வாரம் நீங்கள் வருத்தப்பட தேவையில்லை.
 

712
துலாம்

தூலா ராசி நேயர்களே, உங்கள் தொழிலில் வெற்றி பெற இந்த வாரம் கடினமாக உழைக்க வேண்டும். பணம் தொடர்பான விஷயங்களில், இந்த வாரம் நீங்கள் ஒரு பெரிய சாதனையை செய்யலாம். பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில புதிய வழிமுறைகளை கடைப்பிடிப்பது நன்மை தரும். காதல் வாழ்க்கை இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும்.
 

812
விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, இந்த வாரம் பலன் கிடைக்கும். அறிவியல் துறையில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு இந்த வாரம் பல பரிசுகளை அளிக்கும். அன்புக்குறியவர் மற்றும் உங்களுக்கிடையில் ஏதேனும் தவறான புரிதல் இருந்தால், உரையாடல் மூலம் அதை தீர்க்கவும்.
 

912
தனுசு

தனுசு ராசிக்காரர்களே, குடும்ப உறுப்பினர்களை பிரிந்து செல்ல நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த முயற்சிப்பது முக்கியம். வரும் வாரம் ஆண்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக ஆண்கள் செய்து வரும் நல்ல திட்டங்களுக்கு இந்த வாரம் வெளிப்படும். உங்கள் அன்பான குணங்கள் உங்களுக்கு நிறைய அன்பையும் மகிழ்ச்சியான தருணங்களையும் கொண்டு வரும்.
 

1012
மகரம்

மகர ராசி நேயர்களே, உங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் அமைதியாக இருப்பதன் மூலம் உங்கள் உறவை வலுப்படுத்த முடியும். இந்த வாரம் உங்கள் அலுவலகம் அல்லது வீட்டில் சில பதற்றத்தை நீங்கள் உணரலாம். இந்த வாரம் உங்கள் எண்ணங்களை தெளிவாக வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். இந்த வாரம் வேலை சம்பந்தமாக சில டென்ஷன் வரலாம்.
 

1112
கும்பம்

இந்த வாரம் கும்ப ராசி நேயர்களே, உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இந்த வாரம் உங்கள் கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டு நல்ல பழக்கங்களை கடைப்பிடிக்க விரும்புவீர்கள். அலுவலகத்தில் உள்ள நுணுக்கமான பிரச்சினைகளை தீர்க்க உங்கள் சாதுர்யத்தையும் புரிதலையும் பயன்படுத்த வேண்டும். உங்கள் அலுவலகத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் கண்டிப்பாக மேலிடத்தில் தெரியப்படுத்தவும்.
 

1212
மீனம்

மீன ராசிக்காரர்களே, இந்த வாரம் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கிறது. எந்தவொரு சவாலான சூழ்நிலையிலும் பீதி அடைய வேண்டாம், ஏனெனில் நீங்கள் அவற்றை எளிதாக எதிர்கொள்ள முடியும். உங்களை நம்பி முழு நம்பிக்கையுடன் முன்னேறுங்கள். உங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு ஏற்ற அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். இது உங்கள் வேலையைத் தொடர உங்களை மேலும் ஊக்குவிக்கும்.

click me!

Recommended Stories