குரு பெயர்ச்சி 2023: மிதுனம் குரு பெயர்ச்சி 2023 பலன்கள் : லாப குரு தரும் அமோகமான பலன்!

First Published | Apr 7, 2023, 3:07 PM IST

நிகழவிருக்கும் குருபெயர்ச்சியால் மிதுன ராசியினருக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

குரு பெயர்ச்சி 2023 :

குரு பெயர்ச்சியானது வருகிற சோபகிருது சித்திரை மாதம் 9 ஆம் தேதி அதாவது ஏப்ரல் 22ம் தேதி அன்று குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர உள்ளார். இந்த பெயர்ச்சியால் மிதுன ராசிக்கு குரு பகவான் ராசிக்கு 12ம் இடத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். லாப ஸ்தானத்திற்கு செல்லும் மிதுனம் பல்வேறு விதங்களில் நல்ல பலன்களை தருவார்.

நிகழவிருக்கும் குருபெயர்ச்சியால் மிதுன ராசியினருக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

குரு பெயர்ச்சி பார்வை பலன் :

மிதுன ராசிக்கு அதிபதியான புதன் பகவான், குரு பெயர்ச்சி ஆகும் நேரத்தில் அவருடன் மேஷத்தில் சஞ்சரிப்பார்.

குரு பார்வை :

குரு ராசிக்கு 11ஆம் இடத்தில் லாப ஸ்தனத்தில் சஞ்சரிக்க உள்ளார். பொதுவாக குரு பகவான் 5, 7, 9 ஆகிய இடங்களை தன்னுடைய பார்வையினால் சுபப்பலன்களை அள்ளித்தருவார் .

குருவின் 5ஆம்பார்வை ராசிக்கு 3 ஆம் இடமான இளைய சகோதரர், தைரிய ஸ்தானத்தைப் பார்க்கிறார்.

குருவின் 7 ஆம் பார்வையால் ராசிக்கு 5 ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்க்கிறார்.

குருவின் 9ஆம்  பார்வையால் ராசிக்கு 7 ஆம் வீடான சம சப்தம ஸ்தானமான மனைவி, தொழில் கூட்டாளி ஸ்தானத்தைப் பார்க்கிறார்.

ஜாதகம் மட்டுமில்ல உங்க மச்சம் கூட சொல்லிடும் உங்க அதிர்ஷ்டததை!

குருவின் அமைப்பு மற்றும் அவரின் பார்வையினால் மிதுன ராசிகார்களுக்கு புது நம்பிக்கை, உத்வேகம் மற்றும் தைரியம் அதிகரித்து சிறப்பாக செயல்படுவீர்கள். அதே சமயம் ஆணவத்தை ஒதுக்கி வைத்து விட வேண்டும்.

உத்தியோகம் :

வேலை செய்பவர்களுக்கு இதுவரை இருந்த தொந்தரவுகள் நீங்கி உங்கள் உழைப்பிற்கு தகுந்த அங்கிகாரம் பெற்று ஊட்டிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு பெற்று புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். அதே நேரத்தில் அடுத்தவர்களின் பணியில் கழுத்தை நீட்டாமல் இருப்பது நல்லது.

வியாபாரம்/ தொழில்:

சொந்த தொழில் செய்பவர்களுக்கு இந்த காலம் சிறப்பாக இருக்கும். செய்யும் தொழிலில் லாபம் கிடைத்து மேன்மையடைவீர்கள் . அதீத லாபம் ஏற்படும் யோகம் உள்ளதால் பழைய கடன்களை திருப்பி செலுத்துவீர்கள். தொழிலில் முறையினை விதிமுறைகள், சட்ட விஷயங்களைப் பின்பற்றுங்கள்.

திருமணம் நடக்கும்:

குருவின் பார்வையும் ,அமைப்பும் களத்திர ஸ்தானத்தில் விழுவதால்,இந்த காலத்தில் திருமண உள்ளவர்கள் திருமண முயற்சிகள் கைகூடும் . நல்ல துணை கிடைத்து குடும்ப கடலில் நீந்துவீர்கள்.

குழந்தை பாக்கியம் :

திருமணமாகி குழந்தைக்காக முயற்சிப்பவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்.

வருமானத்த பெருக்க வருஷத்துல 1 தடவ குலதெய்வ கோவிலில் இந்த பூஜை செய்ங்க! வருமானத்துக்கு பஞ்சமே வராது!

Tap to resize

கல்வி :

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைவார்கள். வெளியூர், வெளிநாட்டில் பட்டப்படிப்பு மற்றும் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்காக வெளிநாட்டு பணி கிடைக்கும் நிலை உண்டாகும்

ஆரோக்கியம்:

ஆரோக்கியத்தில் எந்த ஒரு சிக்கலும் இல்லை எனினும் காது, மூக்கு, தொண்டை தொடர்புடைய பிரச்சினைகளில் கவனமாக இருத்தல் வேண்டும். மற்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் அலட்சியமாக இருக்க வேண்டும். எப்போதும் போன்று ரெகுலர் செக் அப் அல்லது மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். பிரயாணங்கள் செய்கையில் அதிக கவனத்துடன் , நிதானமாக செல்வது நன்மை அளிக்கும்.

கலைத்துறை:

இந்த துறையில் உள்ளவர்களுக்கு பல்வேறு புதிய மற்றும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வாய்ப்புகளை நழுவ விடாமல் சரியாக பயன்படுத்திக் கொண்டால் நல்லதொரு முன்னேற்றம் உங்கள் வாழ்வில் ஏற்படும்.

அரசியல்:

அரசு மற்றும் அரசியிலில் உள்ளவர்களுக்கு பல்வேறு சாதக பலன்கள் கிடைக்கும். எனினும் இந்த காலத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்னைகள் உருவாகும். உங்களால் செய்ய முடியும் வாக்குறுதிகளை மட்டும் கொடுத்து செய்து முடிக்கவும். துறை சார்ந்த ரீதியில் பேசும் போது யோசித்து பேசவேண்டும்.

பரிகாரம்:

மிதுன ராசிக்காரர்கள் குருமார்கள், மகான்கள், சித்தர் ஆகோயோரின் சமாதிகளுக்கு சென்று தியானம் செய்து வர வேண்டும்.

அதோடு வீட்டுக்கு அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வாருங்கள்.

சாபங்களினால் தடைப்பட்ட வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம் பெற இந்த எளிய பரிகாரங்கள் செய்தால் போதும்!

Latest Videos

click me!