வருமானத்த பெருக்க வருஷத்துல 1 தடவ குலதெய்வ கோவிலில் இந்த பூஜை செய்ங்க! வருமானத்துக்கு பஞ்சமே வராது!

First Published | Apr 7, 2023, 1:21 PM IST

வருமான பற்றாற்குறை இல்லாமலும், வருமானத்தை பெருக்கி கொள்ளவும் குலதெய்வத்திற்கு எப்படி வழிபாடு மற்றும் பூஜை செய்ய வேண்டும்? என்ற  தகவலை இந்த பதிவில் காணலாம்

நாம் அனைவரும் இரவு,பகல் பார்க்காமல் வியர்வை சிந்தி உழைப்பது நம் வாழ்க்கையை சிறப்பாகவும், மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்பதர்க்கு தான். இப்படி மகிழ்வோடு வாழ வேண்டும் எனில் அதற்கு முக்கிய தேவையாக பணம் மாறியுள்ளது.

இந்த பணத்தை ஈட்டத் தான் நம்மில் பெரும்பாலோனோர் ஓடி ஓடி உழைக்கிறோம். அப்படி உழைத்தும் 4 காசு சேர்பதற்குள் பெரும்பாடு தான். கடினமாக உழைத்தும் சரியான அல்லது நிறைவான வருமானம் இல்லாமல் பலரும் பல சிக்கல்களை சந்திக்கிறார்கள்.நமக்கு விருப்பமான அல்லது பிடித்த வாழ்க்கையை வாழ வேண்டுமெனில் நமது வருமானத்தை பெருக்கிக் கொள்வது மிக அவசியம் .

ஜாதகம் மட்டுமில்ல உங்க மச்சம் கூட சொல்லிடும் உங்க அதிர்ஷ்டததை!

Temple Bells

வருமான பற்றாக்குறை இல்லாமல் இருக்க குலதெய்வத்தின் ஆசியும், அனுக்கிரஹமும் நிச்சயம் வேண்டும். குலதெய்வத்தின் அருள் பெற குலதெய்வ கோவிலுக்கு சென்று பூஜை செய்ய வேண்டும். வருமான பற்றாற்குறை இல்லாமலும், வருமானத்தை பெருக்கி கொள்ளவும் குலதெய்வத்திற்கு எப்படி வழிபாடு மற்றும் பூஜை செய்ய வேண்டும்? என்ற  தகவலை இந்த பதிவில் காணலாம் .

குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது சம்பள பணத்தில் உங்களால முடிந்த அளவில் சாமிக்கு உடுத்தும் படியான ஒரு புடவை ,மற்றும் வேட்டி சட்டை வாங்கி செல்ல வேண்டும். சிவப்பு, மஞ்சள், பச்சை நிறத்தில் புடவை வாங்குவது சிறந்தது. புடவையுடன் மஞ்சள்,குங்குமம், வளையல், பூ தாலி சரடு, 101 ரூபாய் காணிக்கை (501,1001,10001) உங்கள் வருமானத்துக்கு ஏற்ப காணிக்கை செலுத்திக் கொள்ளலாம். அங்கு இருக்கும் பூசாரிக்கு அல்லது அர்ச்சகருக்கு கொடுத்து விட்டு பூஜை செய்ய வேண்டும்.

குரு பெயர்ச்சி 2023 - குரு பெயர்ச்சி பலன்கள் கடகம் : 10ல் குரு பதவி பறிபோகும் மிகுந்த கவனம் தேவை!

Latest Videos


கோவிலுக்கு தேவையான பொருட்கள் எது இல்லையோ அவற்றை உங்களால் முடிந்த அளவில் வாங்கி கொடுக்கும் வேண்டும். உதாரணமாக தாம்பூல தட்டு,உண்டியல், மணி, கண்ணாடி, கடிகாரம், பெரிய அளவிலான விளக்கு, நெய் அல்லது எண்ணெய் வாங்கி தரலாம். மினி விசிறி, மின் விளக்குகள் போன்றவை பழுது அடைந்து இருந்தால் அவற்றை சரி செய்ய தேவையான பணத்தை கொடுத்து சரி செய்ய வேண்டும். அல்லது அதற்கு உண்டான பணத்தை அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும்.

குலதெய்வத்திற்கு இப்படி ஒரு பூஜையையும், வழிபாட்டையும் செய்து வரவேண்டும். கணக்கு பார்க்காமல், மனமகிழ்வோடு இதனை செய்து வந்தால் வருமான பற்றாற்குறை ஏற்படாமல், வருமான தடை ஏற்படாமல் இருக்கும். தவிர வருமானம் இரட்டிப்பு ஆகும்

கடவுள் நம்பிக்கை உள்ளர்வர்கள், கோவிலுக்கு செல்லும் பழக்கம் கொண்டவர்கள் இதனை செய்தால் மிக சிறந்த பலன் கிடைக்கும்.

சாபங்களினால் தடைப்பட்ட வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம் பெற இந்த எளிய பரிகாரங்கள் செய்தால் போதும்!.

click me!