எந்த திசையில் துளசி வைக்க வேண்டும்?
முன்னோர் துளசி செடியை வீட்டின் நடுவில் நடவு செய்யும் மரபு இருந்தது, அதனால் செடிக்கு போதுமான அளவு சூரிய ஒளி, காற்று மற்றும் நீர் கிடைக்கும். ஆனால் தற்போது வீடுகளின் அளவு முன்பை விட சிறியதாகவும், பெரிய நகரங்களை பொறுத்தவரை பிளாட் கலாச்சாரம் வந்துவிட்டதால் துளசி செடியை எங்கு நடுவது என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. வீட்டின் பிரதான கதவுக்கு அருகில் துளசி செடியை நடலாம். ஆனால் உங்கள் வீட்டின் பிரதான கதவுக்கு காற்று, நீர் மற்றும் சூரிய ஒளி படவில்லை என்றால், துளசி செடி காய்ந்துவிடும். அதனால் தான் அத்தகைய வீடுகளின் பால்கனியில் துளசி செடியை நடலாம். ஆனால் பால்கனியிலும் வடக்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தெய்வங்கள் இந்த இரண்டு திசைகளிலும் வாசம் செய்வதாக ஐதீகம். வடக்கு திசை செல்வத்தின் கடவுளான குபேரனின் இருப்பிடமாக கருதப்படுகிறது. எனவே, இந்த திசையில் துளசி நடவு செய்வது உங்கள் வீட்டில் பணவரவை அதிகரிக்கும்.