நம்மில் பலரும் பல விதமான பிரச்சனைகளுடன் தான் வாழ்க்கையை நகர்த்தி வருவோம். ஒரு சிலருக்கு படிப்பில் பிரச்னை அதாவது படிப்பை பின் தொடர பணம் செலுத்த முடியாத சூழலில் இரு[இருப்பார்கள். சிலர் படித்து முடித்து வேலை கிடைப்பதில் பிரச்னைகளை சந்திப்பார்கள்.
நல்ல வேளையில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடுவதில் பிரச்னை இருக்கும். திருமணம் ஆனவர்களுக்கு புத்திரம் பெறுவதில் பல சிக்கல்கள் இருக்கும். கணவன் மனைவி இருவருக்கும் உடலில் எந்த பிரச்சனையும் இருக்காது, எனினும் குழந்தை பெறுவதில் தடை ஏற்பட்டு கொண்டே இருக்கும். இது எதனால் ஏற்படுகிறது என்று சற்று பொறுமையாக சிந்தித்து பார்த்தால், முன்னோர்களின் சாபமாக மட்டுமே இருக்க கூடும்.
அனைத்தும் சரியாக இருப்பினும்,நாம் செய்யும் செயல்களில் தடைகள் அல்லது சிக்கல்கள் வந்தால் அது நிச்சயமாக முன்னோர்களால் சாபத்தினால் தான்.சாபத்தில் மாத்ரு சாபம், பித்ரு சாபம், என்று சொல்லிக் கொண்டே போகலாம்.