உலக மீட்பராம் இயேசுவை தலையில் முள்முடி சூட்டி, தாகத்திற்கு தண்ணீர்கூட வழங்காமல் சிலுவை சுமக்கச் செய்து, அந்த சிலுவையிலேயே அறைந்த நாள் தான் புனித வெள்ளி. அதனால் தான் இந்த நாளில் துக்கம் அனுசரிக்கிறார்கள். புனித வெள்ளியை கருப்பு வெள்ளி, பெரிய வெள்ளி என்றும் அழைக்கிறார்கள். அவரை ஏன் சிலுவையில் அறைந்தார்கள் தெரியுமா? மக்களுக்கு எண்ணற்ற அதிசயங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்தினார். நோய்களை குணமாக்கினார். பேய்களை விரட்டினார். தான் எல்லாம் வல்ல இறைவனின் மகன் என்றார். வணிகமயாகி கிடந்த ஆலயங்களை கண்டித்தார். இதனால் ஏராளமான மக்கள் அவரை பின்பற்றினர். மற்றொரு சாரர் அவரை வெறுத்தனர். அவருடைய வீழ்ச்சிக்காக காத்திருந்தனர். இயேசுவை, கடவுளின் மைந்தன் என சில மக்கள் நம்பவில்லை.30 வெள்ளி காசுக்கு ஆசைப்பட்டு இயேசுவை காட்டி கொடுத்தார் யூதாஸ்.