குரு பெயர்ச்சி 2023 :
குரு பெயர்ச்சியானது வருகிற சித்திரை மாதம் 9 ஆம் தேதி அதாவது ஏப்ரல் 22ம் தேதி அன்று குரு மீனத்திலிருந்து மேஷ ராசிக்கு செல்வார் . இந்த பெயர்ச்சியால் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தில் சஞ்சரிக்க இருக்கிறார்.
இதனால் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நன்மை இல்லையென்றாலும் மோசமான பலனை தராது. இருந்தாலும் சற்று மன அழுத்தத்தினை தரும். மேலும் சற்று கலவையான பலனை தரும் என்பதையும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
குரு பகவான் மட்டுமல்லாமல், உங்கள் ராசிக்கு அஷ்டம சனியாக சனி பகவானும் அமர்ந்து இருப்பதால் இந்த வருடம் முழுவதும் அதிக கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருத்தல் வேண்டும்.
குருவின் பார்வை :
சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசிக்கு, குரு பகவான் 10ம் இடமான வேலை, தொழில் மற்றும் வியாபாரத்தை குறிக்கும் கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார்.
குரு தனது 5ம் பார்வையாக கடக ராசியினருக்கு 2ம் வீடான குடும்ப மற்றும் வாக்கு ஸ்தானத்தை பார்ப்பார்.
குரு தனது 7ம் பார்வையாக கடக ராசியினருக்கு 4ம் வீடான சுக மற்றும் தாய் ஸ்தானத்தைப் பார்ப்பார்.
குரு தனது 9ம் பார்வையாக ராசிக்கு 6ம் வீடான நோய், சத்ரு ஸ்தானத்தைப் பார்ப்பார்.
தவிர கடக ராசியில் குரு உச்சம் பெறவார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.