கண் இமைகளில் :
பெண்களின் கண் இமைகளில் மச்சம் இருந்தால், அந்த மச்சத்தினால் அவரின் அழகை மெருகூட்டக்கூடியதாக அமையும் . இப்படி ஒருவரின் கண் இமைகளில் ஏதேனும் ஒன்றில் மச்சம் இருப்பின், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் , வலது கண் இமையில் மச்சம் இருந்தால் நிச்சயம் அவர் நட்சத்திர அந்தஸ்தை பெற்று பேரும் புகழும் அடைந்து மிக பிரபலமாகப் இருப்பார்.
அதுமட்டுமல்லாமல் அவர் செல்வந்தராக இருப்பார். அதே சமயம் எவ்வளவு பணம் வந்தாலும் அவரால் சேமிக்க முடியாமல் அதிகம் செலவழிக்கக்கூடிய நபராக இருப்பார்.
உதட்டின் மேல் மச்சம்:-
பெண்ணுக்கு உதட்டிற்கு மேல் மச்சம் இருந்தால் அழகாக, மிக விஷேசமானதாகவும், மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது.
உதட்டின் கீழ் மச்சம் :
உதட்டிற்கு கீழே மச்சம் இருப்பின் அவர்களிடம் சூதாட்ட எண்ணம் நிறைந்து காணப்படுமாம் . உழைக்கும் தன்மையும் குறைந்து காணப்படுமாம் .