Akshaya Tritiya 2023 Date and Time: இந்துக்கள் அட்சய திருதியை பண்டிகையை வைஷாக மாதத்தில் சுக்ல பக்ஷத்தின் 14ஆவது நாளில் கொண்டாடுகிறார்கள். இந்த நாள் ஆண்டின் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது. சமஸ்கிருதத்தில் அட்சயா என்றால் 'நித்தியமான, முடிவில்லாதது' எனவும், திருதியா என்றால் 'மூன்றாவது' எனவும் அர்த்தம்.
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது எதிர்காலத்தில் செழிப்பையும் செல்வத்தையும் தரும் என்று நம்பி பலர் அன்றைய தினம் தங்கம் வாங்குகிறார்கள். இந்நாளில் பக்தர்கள் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு பூஜை செய்வார்கள். இந்த நாளில் மகா லட்சுமி, விஷ்ணு வழிபாடு சிறந்தது. மகாவிஷ்ணுவுக்கு தூபம், சந்தனம், துளசி, மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு பூஜை செய்து, மஞ்சள் வஸ்திரங்களைச் சமர்பிக்க வேண்டும்.
அட்சய திருதியை 2023 தேதி:
நல்ல அதிர்ஷ்டத்தை வழங்கும் அட்சய திருதியை நாள், இந்தாண்டு ஏப்ரல் 22ஆம் தேதி வருகிறது.
பூஜை நேரங்கள்: ஏப்ரல் 22ஆம் தேதி அன்று காலை 07:49 முதல் மதியம் 12:20 வரை வழிபடலாம்.
தங்கம் வாங்குவதற்கான நல்ல நேரம்: ஏப்ரல் 22ஆம் தேதி (சனி) காலை 7:49 AM முதல் ஏப்ரல் 22ஆம் தேதி ஞாயிறு, காலை 7:47 AM மணி வரையிலும் வாங்கலாம்.
அட்சய திருதியை முக்கியத்துவம்!
பிரம்மன் உலகை உருவாக்கிய நாள் அட்சய திரிதியை நாள் என்கிறது சாஸ்திரங்கள். அதனால் அட்சய திருதியை நாளில் ஒருவர் பல சுப காரியங்களைச் செய்யலாம். இந்த நாளில் கங்கையில் நீராடுவது ரொம்ப மகிமை வாய்ந்தது. இந்நாளில் கங்கையில் ஸ்நானம் செய்பவர் எல்லா எதிர்மறை ஆற்றலில் இருந்தும் விடுபடுகிறார். பார்லி, கோதுமை, பருப்பு, தயிர் சோறு, பால் ஆகியவற்றை முன்னோர்களின் பெயரில் தானம் செய்யுங்கள். இந்த நாளில் தங்கம் வாங்குவது நல்லது. வாங்க முடியாதவர்கள் பச்சரிசி, வெல்லம் போன்றவை வாங்கலாம்.
இதையும் படிங்க: உங்க கையில் பணம் சேர! இந்த 7 பொருட்களை வீட்டில் வாங்கி வையுங்கள்! அதிர்ஷ்டம் தேடி வரும்..
அட்சய திருதியை விரதம், பூஜை!
இந்நாளில் விரதம் இருப்பவர்கள் காலை எழுந்து நீராடி விட்டு மஞ்சள் ஆடை அணிய வேண்டும். விஷ்ணுவின் சிலை அல்லது படத்தை வைத்து துளசி, மஞ்சள் மலர் மாலை அல்லது மஞ்சள் பூக்களை சாற்றவும்.தீப, தூப, ஆராதனை செய்ய வேண்டும். விஷ்ணுவுக்கு நெய் தீபம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும். மஞ்சள் நிற ஆசனத்தில் அமரவும். விஷ்ணு சஹஸ்ரநாமம், விஷ்ணு சாலிசா ஆகிய விஷ்ணு தொடர்பான ஸ்தோத்திரங்களை உச்சரிக்க வேண்டும். நிச்சயம் இந்த வழிபாடு உங்களுக்கு நல்ல பலன்களை வாரி வழங்கும்.
இதையும் படிங்க: அட்சயதிரிதியை 2023: இந்த நாளில் தங்கம் வாங்க முடியாதவர்கள் என்ன வாங்கணும் தெரியுமா?