வீட்டில் தரித்திரம் நீங்க! முதல்ல இந்த 1 காரியம் செய்து பாருங்க! செல்வம் குவிந்து கொண்டே இருக்கும்..

First Published | Apr 6, 2023, 5:28 PM IST

வீட்டில் இருக்கும் தரித்திரம் விலகி செல்வம் பெருக செய்ய வேண்டியவை முழுவிவரம்.. 

வீட்டில் என்ன பூஜை செய்தாலும் செல்வம் பெருகாமல் இருந்தால் அதற்கு நீங்கள் செய்யும் சில தவறுகள் காரணமாக இருக்கலாம். அதை சரிசெய்து கொண்டாலே போதும். மேலும் என்ன மாதிரியான விஷயங்களை செய்தால் வீட்டில் தரித்திரம் விலகி செல்வம் பெரும் என்றும் இங்கு காணலாம். 

செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் வீட்டை துடைக்கவே கூடாது. பிற நாட்களில் சுத்தம் செய்யலாம். சுத்தம் செய்யும் தண்ணீரில் கைப்பிடி கல்உப்பு கலந்து துடைத்தால் உங்கள் வீட்டில் விழுந்த கண் திருஷ்டி விலகும். வீட்டு பூஜை அறையில் இரண்டு விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். கிழக்கு முகமாக குத்துவிளக்கும், துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருப்பது அவசியம். வீட்டு பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றும் போது இரண்டு திரிகள் போட்டு ஏற்ற வேண்டும். இதனால் செல்வம் ஈர்க்கப்படும். 

Tap to resize

சோம்பு, பச்சைக் கற்பூரம், ஏலக்காய் ஆகியவை மஞ்சள் துணியில் வைத்து முடிச்சு போட்டு கொள்ளுங்கள். இந்த மூட்டையை குபேர மூலையில் வைத்துவிடுங்கள். தினமும் பூஜை முடிந்து இங்கு தூபம் காட்டினால் வீட்டில் எப்போதும் பணம் வந்து கொண்டே இருக்கும். வீட்டில் இருக்கும் பணப்பெட்டியை/ பீரோவை தென்மேற்கு திசையில் கிழக்கு நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். இந்த திசையில் வைக்க முடியாதவர்கள் வடக்கு பார்த்து வைக்கலாம். வடமேற்கு திசையில் கிழக்கை நோக்கி வைத்தாலும் பணம் சேரும். 

அன்னம், உப்பு, நெய் ஆகியவற்றை வெறும் கையால் கொடுக்கக் கூடாது. இதனால் வீட்டில் தரித்திரம் பிடிக்கும். இரவிலும், வீட்டில் பூஜை முடித்ததும் வீட்டை சுத்தம் செய்யக் கூடாது. இதனால் வீட்டில் மகாலட்சுமி தங்காமல் போய்விடுவார். வீட்டை சுத்தம் செய்து, அந்த குப்பைகளை வீட்டு மூலை முடுக்குகளில் வைக்கக் கூடாது. இதனாலும் தரித்திரம் வரும். 

இதையும் படிங்க: அட்சய திருதியை 2023: எந்த நேரத்தில் தங்கம், வெள்ளி வாங்கினால், நம் வீட்டில் செல்வம் குவியும் தெரியுமா?

பணம் கொடுக்கும்போது வாசல்படிக்கு வெளியில் நின்றபடி வழங்கக் கூடாது. இதனால் உங்களுடைய அதிர்ஷ்டம் பிறருக்கு போய்விடும். உப்பு, பருப்பு, பால் ஆகியவை குறையாமல் வீட்டில் வைத்து கொள்ளுங்கள். இவை குறைந்தாலும் தரித்திரம் தான். இங்கே சொன்ன பழக்கங்களை முறையாக நீங்கள் கடைப்பிடித்தால் வீட்டில் தரித்திரம் விலகி செல்வம் பெருகும். 

இதையும் படிங்க: புனித வெள்ளியை கிறிஸ்தவர்கள் கொண்டாடமாட்டார்கள்! துக்கம் அனுசரிப்பார்கள் ஏன் தெரியுமா?

Latest Videos

click me!