குருவின் பார்வை 4ஆம் வீட்டினை பார்ப்பதால் அம்மா வழியான சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. அம்மாவின் உடல் ஆரோக்கியம் மேன்மையடையும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு மறைமுக போட்டி, பொறாமைகள் நீங்கி, சாதகமான சூழல் உருவாகும். தவிர முடங்கி கிடந்த வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.
வண்டி வாகனம் போன்றவை வாங்க நல்ல சூழல் உருவாகும். வெற்றி மேல் வெற்றி உங்களை தேடி வரும். சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். வீட்டில் சந்தோஷமும் நிறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
குருவின் பார்வை 6ஆம் வீட்டை பார்ப்பதால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வம்பு வழக்குகள் இருந்தவர்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். தம்பதிகள் சவால்களை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டாலும் தெய்வத்தின் அனுகிரகத்தினால் அனைத்தையும் எதிர்த்து ஜெயிப்பீர்கள்.