புதன் வக்கிர பெயர்ச்சி 2023: மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன் பகவான் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதியன்று மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி மேற்கொள்ள இருக்கிறார். இந்த மாற்றத்தால் 5 ராசிகார்களுக்கு நல்லதொரு மேன்மையும், ஏற்றத்தையும் பெறுவார்கள்.
ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சியானது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வு தான் எனினும் சில கிரகங்கள் மட்டுமே வக்கிரம் மற்றும் அதிசாரம் ஆகியவற்றை மேற்கொள்ளும். அந்த வகையில் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன் பகவான் ஏப்ரல் 21ம் தேதி அன்று மேஷ ராசியிலேயே வக்ர பெயர்ச்சி மேற் கொள்ள உள்ளார்.
இந்த நிகழ்வினால் சில ராசியினருக்கு தாங்கள் செய்யும் தொழில் அல்லது வியாபாரம், வேலை, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் தருவதாக அமையும். அந்த வகையில் நிகழவிருக்கும் இந்த புதன் வக்கிர பெயர்ச்சியால் எந்தெந்த ராசியினர் யோக பலன்களை பெறுவார்கள் என்று இந்த பதிவில் காணலாம்.