கேதார யோகம் என்றால் என்ன?
ஒரு நபரின் ஜாதகத்தில் ராகு மற்றும் கேது தவிர மற்ற 7 கிரகங்கள் அடுத்தடுத்த 4 வீடுகளை ஆக்கிரமிக்கும் போது குண்டலியில் கேதார யோகம் உருவாகிறது. அதாவது உங்களுடைய ஜாதகத்தில் 1, 4, 7, 10 என்ற 4 இடங்களை கேந்திர ஸ்தானம் என்பார்கள். அந்த கேந்திர ஸ்தானங்கள் இல்லாத ஏதேனும் 4 வீடுகளில் எல்லா கிரகங்களும் ஆக்கிரமிக்கும்போது கேதார யோகம் உண்டாகிறது. இந்த யோகம் மக்கள் வாழ்க்கையில் தனித்துவமான நிலையை அடைய உதவுகிறது. ஆனால் முயற்சியும் இருக்க வேண்டும். இந்த கேதார யோகம் ஏப்ரல் 23 முதல் ஏப்ரல் 30 வரை இருக்கும்.
ஏப்ரல் 23ல் உருவாகும் இந்த கேதார யோகத்தில் புதன், சூரியன், வியாழன், ராகு ஆகியோர் மேஷ ராசியிலும், சந்திரன், சுக்கிரன் ரிஷபத்திலும், சனி கும்பத்திலும், செவ்வாய் மிதுனத்திலும் உள்ளனர். இந்த சுப யோகம் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்.