பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட அம்மாவாசையான இன்று இந்த 3 எளிய பரிகாரகங்ள செய்ங்க!

First Published | Apr 19, 2023, 9:01 AM IST

தமிழ் வருடத்தின் முதல் அம்மாவாசை இன்று அனுசரிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் பல்வேறு விதமான பரிகாரங்களை செய்தால் வீட்டில் உள்ளர்வர்களின் நாட்பட்ட வியாதி,தீராத கடன் ,வேலையில்லா திண்டாட்டம், திருமண தடை போன்றவைகளுக்கு விரைவில் ஒரு அனுகூலமான செய்தி கிடைக்கும். 
 

ஒருவர் எப்பேர்ப்பட்ட செல்வம், பணம்  படைத்து இருந்தாலும் அவர்களின் வீட்டில் உள்ளவர்களுக்கு நாட்பட்ட வியாதி, திருமண தடை அல்லது வேலை கிடைப்பதில் தாமதம் , குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பின் அவர்களது வாழ்வில் நிச்சயமாக நிம்மதி இல்லாமல்  .என்ன தான் காசு ,பணம் இருந்தாலும் இத்தகைய பிரச்சனைகள் இருப்பின் அவையனைத்தும் 1 ரூபாயிக்கு கூட உபயோகம் ஆகாது. 

பொதுவாக இம்மாதிரியான பிரச்சனைகளுக்கு காரணம் பித்ரு தோஷமாக கூட இருக்கலாம். இந்த பித்ரு தோஷத்தின் தாக்கத்தை குறைக்க அம்மாவாசையான இன்று இந்த 3 எளிய பரிகாரங்களை செய்து பாருங்கள். அது நிச்சயம் உங்களது வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை கொடுக்கும். அத்தகைய பரிகாரங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம். 

பரிகாரம் 1:

 ஒரு கைப்பிடி பச்சரிசி மாவு எடுத்துக் கொண்டு அதில் பொடித்த வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனை எறும்பு புத்தில் தூவி விட வேண்டும் அல்லது போட்டு விட வேண்டும். இதனை இன்று முதல் 3 நாட்கள் ( அதாவது வெள்ளிக்கிழமை) வரை செய்யலாம் அல்லது 11 நாட்கள் செய்து வர உங்கள்  நிம்மதியான ஒரு சூழல்  ஏற்படும்

Tap to resize

பரிகாரம் 2:

 காகத்திற்கு ஒரு கைப்பிடி வெள்ளை சாதம் அல்லது எள் சாதத்தினை (எச்சில் ஆகாத சாதம் )இன்று மதியம் வைத்து பாருங்கள். 3 நாட்கள் இதனை கடைபிடித்தால் 4 ஆம் நாள் காகம் நீங்கள் சாதம் வைக்கும் இடத்தில் காத்து கொண்டிருக்கும்.  இதனை தினமும் செய்து வர குடும்பத்தில் உள்ள பல பிரச்சனைகளுக்கு விரைவில் முடிவு கிடைக்கும். மேலும் குழப்பமில்லாத  நிம்மதியான வாழ்க்கையும் கிடைக்கும்

சோபகிருது வருடத்தின் முதல் அமாவாசை எப்போது? என்னென்ன செய்தால் நம் வம்சம் வாழையடி வாழையாக தழைக்கும் தெரியுமா?
 

பரிகாரம் 3:

பசுவிற்கு இன்று அகத்திக் கீரை வாங்கி கொடுங்கள். அம்மாவாசையான இன்று இதனை செய்வது மிகவும் சிறந்த பலனை தரும். தவிர பித்ரு தோஷத்தின் தாக்கமும் குறையும் . இதனை உங்களால் இயன்ற அளவு எப்போதெல்லாம் செய்ய முடிகிறதோ அபோதெல்லாம் செய்யுங்கள். இதனை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயமான மாற்றமும் ,மேன்மையும் கிட்டும். 

நம்பிக்கை உள்ளவர்கள் இந்த எளிய பரிகாரங்களை அம்மவாசையான இன்று செய்து பாருங்க. தவிர உங்களால் முடிந்தால் இன்று முதல் 3 அல்லது 11 நாட்கள் தொடர்ந்து செய்து  பாருங்கள். தவிர 3 /7/9/11 என்ற கணக்கில் சனிக்கிழமைகளிலும் செய்து வாருங்கள். உங்களது பித்ரு தோஷங்களின் தாக்கம் குறைந்து வீட்டில் தடைபட்ட அனைத்து காரியங்களிலும் ஜெயம் உண்டாகும். 

Latest Videos

click me!