சூரிய கிரகணம் – எதை எல்லாம் செய்யலாம்! கண்டிப்பாக கர்ப்பிணிகள் தேங்காய் வைத்து கொள்ள வேண்டும்.. ஏன் தெரியுமா?

First Published | Apr 18, 2023, 7:35 PM IST

சூரிய கிரணத்தின்போது எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூ.டாது என்பதை இந்த பதிவில் காணலாம். 

2023 ல்ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வைஷாக அமாவாசை அன்று நிகழ்கிறது. ஏப்ரல் 20ஆம் தேதி வரும் சூரிய கிரகண நேரத்தில் பூமியில் ராகு, கேது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் தான் சூரிய, சந்திர கிரகணத்தின் போது எந்த ஒரு சுப காரியமும் செய்யப்படுவதில்லை. நாம் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. ஏனென்றால் கிரகணத்தின் போது சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்கள் கண்களை பாதிக்கும் என்பார்கள். சூரிய கிரகணத்தின் போது செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து இங்கு காணலாம். 

கர்ப்பிணிகள் சூரிய அல்லது சந்திர கிரகணத்தின் போது கத்தரிக்கோல், ஊசி, கத்தி ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என ஜோதிடர்கள் சொல்கின்றனர். இந்த நேரத்தில் தைக்கக் கூடாது. சாஸ்திரங்களின்படி, கர்ப்பிணிகள் கிரகணத்தின் போது பழங்கள், பூக்கள், இலைகள் ஆகியவற்றை பறிக்கக்கூடாது. இப்படி செய்வதால் கிரகண தோஷம் ஏற்படும். 

Latest Videos


சூரிய அல்லது சந்திர கிரகணத்தின் போது வழிபாடு உட்பட எந்த மத அல்லது மங்களகரமான காரியங்களையும் செய்யக்கூடாது. கிரகண நேரத்தில் சுப காரியங்கள் செய்வது சாஸ்திரங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அட்சய திருதியை ஏப்ரல் 22ஆம் தேதியா? 23ஆம் தேதியா? எந்த நாளில் தங்கம் வாங்க வேண்டும்!!

சூரிய கிரகணம் தொடங்கி அது முடியும் வரைக்குமே எப்போதும் துணை நிற்கும் குலதெய்வம், பித்ருக்கள், இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள். கிரகண நேரத்தில், மனதுக்குள் கடவுளின் பெயரை உச்சரிக்க வேண்டும். காயத்ரி மந்திரம், மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை சொல்வதால் அதிக பலன் கிடைக்கும்.

ஜோதிடர்களின் கூற்றுப்படி, கர்ப்பிணிகள் கிரகண நேரத்தில் தேங்காய் வைத்துக் கொள்ள வேண்டும். இது கிரகணத்தின் எதிர்மறை விளைவை முடிவுக்குக் கொண்டுவருகிறது. கிரகணம் முடிந்ததும் அந்த தேங்காயை ஓடும் நதியில் விட வேண்டும். கர்ப்பிணிகள் கிரகண நேரத்தில் வயிற்றில் காவி (ochre) பூச வேண்டும். இதை செய்வதன் மூலம், வயிற்றில் உள்ள குழந்தைக்கு எந்த எதிர்மறையான விளைவுகளும் ஏற்படாது. 

தவறுதலாக கூட உணவு சாப்பிடக் கூடாது. கிரகண நேரத்தில் பூமியில் ராகு-கேதுவின் எதிர்மறை தாக்கம் அதிகமாக இருக்கும். இதனுடன், கிரகணத்தால் உணவும் மாசுபடுகிறது. கிரகண நேரத்தில் உணவு உண்பதால் உடல்நலக்குறைவு ஏற்படும். குறிப்பாக கிரகணத்தின் போது உணவு சமைக்க வேண்டாம். முன்பே சமைத்து வைத்து கொள்ளுங்கள். துளசி இலைகளை கிரகண நேரத்தில் உண்ணலாம். அவைகளால் ராகு மற்றும் கேதுவின் தாக்கம் குறையும் என்பது ஐதீகம். கிரகண நேரத்தில் வீட்டிலேயே இருக்க வேண்டும். 

இதையும் படிங்க: சூரிய கிரகணம் 2023: இதனால் 7 ராசிக்காரர்களுக்கு தோஷம்!! அவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

click me!