Today Rasipalan 20th Apr 2023: துணிந்து இறங்கினால் வெற்றி உங்களுக்குத்தான்.! எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்.?

First Published | Apr 20, 2023, 5:30 AM IST

ஏப்ரல் 20ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.
 

மேஷம்:

ஆன்மீக செயல்களில் ஈடுபடுவீர்கள். உங்கள் சிந்தனை புதுமையாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவி மகிழ்வீர்கள். தனிப்பட்ட வேலை அமைதியாகவும் சுமூகமாகவும் முடியும். காரணமில்லாமல் நெருங்கிய உறவினர்களுடன் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டாம். தொழிலில் அதிகம் முதலீடு செய்ய வேண்டாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
 

ரிஷபம்:

வீட்டில் உள்ள பெரியவர்களின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின் படி செயல்படவும். முக்கியமான வேலை சரியான நேரத்தில் முடியும். பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். வாடகை விஷயங்களில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். தொழிலில் சாதகமான சூழல் இல்லை.  குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.
 

Tap to resize

மிதுனம்:

வீட்டின் முக்கியமான வேலை ஒன்றை செய்து முடிப்பீர்கள். வீட்டு பிரச்னையில் வெளிநபர்களை தலையிட அனுமதிக்காதீர்கள். கோபப்படாமல் பிரச்னைக்கு தீர்வு காண முயலுங்கள். ஆன்லைன் ஷாப்பிங்கில் நேரம் செலவிடுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
 

கடகம்:

குழந்தைகளின் பிரச்னைகளுக்கு எளிதாக தீர்வு காண்பீர்கள். பழைய கருத்து வேறுபாடுகள் இன்று நீங்கும். நீங்கள் துணிச்சலுடன் செய்யும் செயலுக்கு சரியான ரிசல்ட் கிடைக்கும். யாரையும் நம்ப வேண்டாம். தொழிலில் தடை ஏற்படலாம். கனவன் - மனைவி உறவில் ஈகோவை தவிர்க்கவும். 
 

சிம்மம்:

சுய ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது. உங்கள் திறமைக்கான ரிசல்ட் உங்கள் வேலையில் கிடைக்கும். எப்பேர்ப்பட்ட பிரச்னைக்கும் தீர்வு காணும் சக்தியை இப்போதைய கிரக அமைப்பு உங்களுக்கு கொடுக்கும். பொருளாதார மந்த நிலை ஏற்படும். 
 

கன்னி:

உங்களுக்கு சாதகமான தினம். உங்கள் இலக்கை நோக்கி கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம். குடும்பம் மற்றும் சமூகத்தில் உங்கள் ஆதிக்கம் இருக்கும். முதலீடு விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம். தொழிலில் பிரச்னை ஏற்படும்.
 

துலாம்:

ஃபோனில் உங்களுக்கு முக்கியமான செய்தி வந்து சேரும். சாத்தியமில்லாத வேலை ஒன்று இன்று திடீரென நடந்தேறும். வெளிவேலைகளில் அதிக நேரத்தை செலவிடாதீர்கள். அதிக கவலை வேண்டாம். ஆரோக்கியம் மிகச்சிறப்பாக இருக்கும்.
 

விருச்சிகம்:

வீட்டு பரமாரிப்பு வேலைகளில் நேரம் செலவழிப்பீர்கள். பொருளாதாரத்திலும் கவனம் செலுத்தவும். மற்றவர்களை நம்ப வேண்டாம். உங்கள் திறமை மற்றும் கடின உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து செயல்படவும். சரியான ரிசல்ட் கிடைக்கும். கவனக்குறைவு மற்றும் அவசரம் பாதிப்பை தரும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கணவன் - மனைவி இடையே நல்லுறவு இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
 

தனுசு:

ஃபோன் அல்லது ஈமெயிலில் முக்கியமான மற்றும் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். பொருளாதார திட்டங்களை முடிக்க சரியான நேரம். உறவினருடனான மோதலுக்கு தீர்வு காண ஏற்ற சமயம் இதுதான்.  வரவுடன் சேர்த்து செலவும் அதிகரிக்கும்.
 

மகரம்:

சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். தேவையில்லாத பேச்சுகளில் நேரம் செலவழிக்காமல் உங்கள் இலக்கை நோக்கி செயல்படுங்கள். தொழிலில் முக்கியமான முடிவுகள் எதுவும்  இப்போது எடுக்க வேண்டாம். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. 
 

கும்பம்:

குடும்பத்தினருடன் ஐடியாக்களை பகிர்ந்தால் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். திடீரென சில செலவுகள் வரும். அவற்றை தவிர்க்கவும் முடியாது. எந்த வேலையை செய்தாலும் பொறுமையும் நிதானமும் அவசியம். கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படலாம்.
 

மீனம்:

நீண்டகாலத்திற்கு பின் நண்பர் ஒருவரை சந்திபத்தன் மூலம் மிகுந்த மகிழ்ச்சியடைவீர்கள். தங்கள் லட்சியங்களை நினைத்து இளைஞர்கள் கவலைப்படுவார்கள். சர்ச்சைக்குரிய விவாதங்களில் இருந்து விலகி இருக்கவும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.
 

Latest Videos

click me!