Today horoscope 24th January 2023 Indraiya Rasipalan in Tamil | பயனத்தை தவிர்க்க வேண்டிய ராசிகள்!

Published : Jan 24, 2023, 05:30 AM IST

Today horoscope 24th Jan 2023 Indraiya Rasipalan in Tamil : பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (24/01/ 2023) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.  

PREV
112
Today horoscope 24th January 2023 Indraiya Rasipalan in Tamil |  பயனத்தை தவிர்க்க வேண்டிய ராசிகள்!

இன்று பணிச்சுமை அதிகமாக இருக்கும். பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்படவும். ஒரு கட்டத்தில் தனிமையாக உணர்வீர்கள். வாழ்க்கைமுறையில் எதிர்மறையான மாற்றங்கள் ஏற்படலாம். அனுபவம் வாய்ந்த நபர்களுடனான சந்திப்பு மனஅமைதியை தரும். நிதி தொடர்பான வணிகத்தில் சிறப்பு கவனம் தேவை.
 

212

உங்கள் வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முயற்சிப்பீர்கள் முதலீடு சம்பந்தமான வேலைகளில் பலன்களைப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். சில சமயம் தன்னம்பிக்கை குறையலாம். இந்த நேரத்தில் நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் உங்கள் முயற்சிகள் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொறுப்புகளின் சுமை கூடும்.
 

312

இன்று தேவையான வேலைகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். பண வரவை விட செலவுகள் அதிகரிக்கும். உங்கள் விருப்பத்தை விரைவாக நிறைவேற்ற எந்த தவறான வழியையும் பயன்படுத்த வேண்டாம்; இல்லையெனில் நீங்கள் சிக்கலில் சிக்கலாம்.
 

412

இன்றைய நாளின் ஆரம்பம் சிறப்பாக இருக்கும். மக்கள் நலப் பணிகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். வீடு மாற்றம் அல்லது பயணம் தொடர்பான சில வகையான சிக்கல்களால் மன அழுத்தம் இருக்கலாம். தகவல்தொடர்புகளில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் எதிர்காலத் திட்டங்களைத் தொடங்குவதற்கு சாதகமான நேரம்.
 

512

இன்று மற்றவர்களின் பிரச்சனைகளை தீர்க்க நீங்கள் உதவுவீர்கள். முழு ஆற்றலுடன் பணிகளை முடிப்பதில் உற்சாகம் உண்டாகும். தவறான செலவினங்களைக் கட்டுப்படுத்துவது அவசியம். பண விஷயத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
 

612

புதிய அறிவைப் பெறுவதில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சோதனையிலும் வெற்றி பெற முயற்சிப்பீர்கள். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம். செய்யும் வேலையில் இடையூறு ஏற்படலாம்.
 

712

இன்று நாள் அற்புதமாக கடந்து போகும். போன், இன்டர்நெட் மூலம் உங்களது எந்த வேலையும் எளிதாக முடிவடையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற வாய்ப்பு உள்ளது. லாட்டரி, சூதாட்டம், பந்தயம் போன்றவற்றை தவிர்க்கவும். தவறான வாதங்களைத் தவிர்க்கவும். சில சவால்களை சந்திக்க நேரிடலாம்.
 

812

இன்று எந்த ஒரு நீண்ட கால மன அழுத்தமும், கவலையும் நீங்கும். நாளின் இரண்டாம் பாதியில் சில பிரச்சனைகள் வரலாம். உங்கள் முக்கியமான விஷயங்களை பாதுகாப்பாக வைத்திருங்கள். மற்றவர்களைச் சார்ந்து இருப்பது தொந்தரவாக இருக்கும். வீட்டிற்கு நெருங்கிய உறவினர் வருகை சில முக்கிய வேலைகளில் இடையூறு ஏற்படலாம்.
 

912

நீண்ட நாட்களுக்குப் பிறகு நெருங்கிய உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தொழில் மேற்படிப்புக்கு முயற்சிப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.
 

1012

இன்று நிதி ரீதியாக சிறந்த நாள் என்கிறார். பண வரவு திருப்தி தரும். குடும்பப் பொறுப்புகள் கூடும். அதைச் சரியாகக் கையாள்வதில் சிரமப்படுவீர்கள். நிதானத்துடனும் பொறுமையுடனும் செயல்படவும். யாருடனும் அதிக வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். வாகனம் ஓட்டும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
 

1112

இன்று ஆன்மீக வழிபாடுகளால் மனநிம்மதி கிடைக்கும். தொழில் விரிவாக்கம் தொடர்பாக சில உறுதியான மற்றும் முக்கியமான முடிவுகளையும் எடுக்க வேண்டியிருக்கும். உங்கள் கனவுகள் மற்றும் கற்பனைகளை நனவாக்க இது சரியான நேரம். வரவு செலவில் ஏற்ற இறக்கம் காணப்படும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
 

1212

இன்றைய நாள் மிகவும் நன்மை தரும் நாள். நீண்ட நாட்களாக தடைபட்ட வேலைகளை முடிக்க இதுவே சரியான நேரம். உறவுகள் மேம்படும், சில நேரங்களில் உங்கள் சந்தேகப் பழக்கம் உங்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தலாம். சொத்து சம்பந்தமான வியாபாரத்தில் வெற்றி உண்டாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories