சரஸ்வதி பூஜை
பஞ்சமி அன்று சரஸ்வதி பூஜை செய்ய அதிகாலையில் எழுந்து புண்ணிய ஸ்தலங்களில் நீராட வேண்டும். அதன் பிறகு சரஸ்வதி தேவிக்கு விருப்பமான மஞ்சள் வண்ண உடை உடுத்த வேண்டும். இந்த ஆடை அந்நாள் முழுக்க அணிய ஏற்றது.
வசந்த பஞ்சமி எப்போது?
ஜனவரி மாதம் 25ஆம் தேதி 12:34 pm முதல் ஜனவரி 26ஆம் தேதி 12:39 pm வரை சரஸ்வதிக்கு பஞ்சமி வழிபாடு செய்யலாம்.
சரஸ்வதியை எப்படி வழிபட வேண்டும்?
வீட்டையும் பூஜையறையையும் தூய்மையாக வைத்து கொள்ளுங்கள். பூஜையறையில் கோலம் வரைந்து, மரப்பலகை போட்டு அதன் மேல் புதிய மஞ்சள் வண்ண துணியை விரித்து கொள்ளுங்கள். பூஜையறையில் வைக்கப்படும் விநாயகரும் மஞ்சள் வண்ணத்தில் தான் இருக்க வேண்டும். இதை தொடர்ந்து சரஸ்வதி தேவியின் உருவ சிலையை அல்லது திருவுருவப் படத்தை மஞ்சள் நீராட்டி மஞ்சள் உடை சாற்றி பூஜிக்க வேண்டும். சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் வண்ண பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். சரஸ்வதி பூஜை அன்று நெய்வேத்தியமாக மஞ்சள் வண்ண போளி, கேசரி, பொங்கல், பால் பாயாசம் ஆகியவற்றை படைத்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்யுங்கள்.