தேங்காய் அழுகினால் அபசகுணமா.. கெட்டது நடக்கும் அறிகுறியா?

First Published | Sep 21, 2022, 4:10 PM IST

கோவிலுக்கு செல்லும் போது அர்ச்சனை செய்வதில் முக்கியமானது தேங்காய். தேங்காய் உடைக்கும் போது துண்டு துண்டாக உடையக்கூடாது,  சரி பாதியாக உடைய வேண்டும். பூ இருந்தால் நல்லது, அழுகினால் அது மோசமான அபசகுணம் என்று பல சடங்குகளை சொல்வதுண்டு. பிள்ளையாருக்கு மட்டும் சிதறு தேங்காய் சிறப்பு. 
 

வீட்டில் நடக்கும் அத்தனை சுப காரியங்களிலும்  தேங்காய் முக்கியமானது. இன்றும் பலர் இறைவனை நினைத்து செய்யும் நல்ல காரியம் நன்றாக கைகூடுமா என்பதை தேங்காய் உடைவதை வைத்தே  கணித்துவிடுவதும் உண்டு. அதனாலேயே தேங்காயை எல்லோரும் பார்த்து பார்த்து கடையில் வாங்குவோம். 

ஏனெனில்  சாமிக்கு உடைக்கும் தேங்காய் நல்லதாக இருக்க வேண்டும். எந்த குறையும் இருக்ககூடாது என்று உள்ளே தண்ணீர் இருக்கா என்று ஆட்டி பார்த்தும். தட்டிபார்த்தும் தான் வாங்குவோம். ஆனால்  தேங்காய் சரியாக உடையவில்லை என்றாலோ அல்லது அழுகி இருந்தாலோ  இறைவனுக்கு ஏதோ குறை வைத்துவிட்டோம் என்று பலரும் கவலைப்படுவார்கள். இது குறித்து பார்ப்பதற்கு முன்பு தேங்காய் பற்றி தெரிந்துகொள்வோம்.

தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்…

தேங்காயில் இருக்கும் மூன்று கண்களில் முதல் கண் பிரம்மன் என்றும், இரண்டாவது கண் லட்சுமி என்றும், மூன்றாவது கண் சிவன் என்பதும் பொதுவான நம்பிக்கையாக உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க தேங்காயை சாமிக்கு உடைக்கும்போது அது அழுகியிருந்தால் அது ஒரு மிகப்பெரிய அபசகுணம் என்று கருதி மக்கள் வருத்தப்படுவது வழக்கம்.

ஆனால் உண்மை என்னவென்றால் தெய்வத்திற்கு  உடைக்கப்பட்ட தேங்காய் அழுகியிருந்தால் அது நன்மை தான். இதன் மூலம் தீயசக்தி, பீடை, கண் திருஷ்டி போன்றவை அகன்று போகும் என்று கூறப்படுகிறது.  அதே நேரம் நீங்கள் வீட்டில் அல்லது கோயில் எங்கு தேங்காய் உடைத்தாலும் தேங்காய் அழுகலாக  உடைந்தால் மனம் வருத்தப்படாமல் மீண்டும் தேங்காய் வாங்கி வந்து உடைக்கலாம்.  
 

Tap to resize

அழுகல் சரி  தேங்காயிலிருந்து வெளிப்படும் மற்ற அறிகுறியும் ஒவ்வொன்றை உணர்த்தும்.   

இறைவனுக்கு உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தாலும் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில்  தெய்வத்திற்கு உடைக்கப்படும் தேங்காய் கொப்பரையாக இருந்தால் அந்த வீட்டில் விரைவில்   சுபகாரியம் நடக்கப் போகிறது  என்று அர்த்தம்.

தேங்காயில் பூ இருந்தால் என்ன அர்த்தம்…

தெய்வத்திற்கு உடைக்கப்பட்ட தேங்காயில் பூ இருந்தால் அது ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகிறது. மேலும் இதனால் பண வரவு, நல்ல லாபம், எதிர்பாராத நல்ல விஷயங்கள் போன்றவை  நடக்கும் என்பது நம்பிக்கை.

இவையெல்லாம் தாண்டி இறைவனை மனம் உருக வேண்டும்  போது  இறைவனை சரணடையும் போது நடக்கும் எந்த ஒரு விஷயமும் அபசகுணம் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள்.  பக்தியோடு பூஜை செய்வதை காட்டிலும் நம்பிக்கையோடு கடவுளை சரணடைவது தான் இறைவனுக்கு பிடித்தமானது. 

Latest Videos

click me!