Navartri : நவராத்திரி - ஒவ்வொரு நாளின் சிறப்பு என்ன தெரியுமா?

First Published Sep 20, 2022, 12:51 PM IST

நவராத்திரி பண்டிகை ஒன்பது நாட்கள், ஒன்பது பெண் தெய்வங்களை அவரவருக்கான முக்கியத்துவங்களோடு வழிபட உருவாக்கப்பட்ட பண்டிகை. இந்த பண்டிகை நாட்களில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சிறப்பு அம்சங்களோடு மக்கள் கொண்டாடுகின்றனர். அதைப்பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
 

நாள் 1 -  மகேஸ்வரி.
 சக்தியின் வடிவமாய் இருக்கும் பார்வதி தேவி இந்த நாளில் அனைவராலும் வணங்கப்படுகின்றாள்.

நாள் 2 -  கருமாரி / ராஜேஸ்வரி. 
கம்பீரமான தோற்றம் கொண்ட, அனைத்து உயிர்களையும் காத்தருளும் கருமாரி அம்மன் இந்த நாளில் வணங்கப்படுகின்றாள்.

நாள் 3 -  வராளி அம்பிகை / வராஹி. 
அனைத்து இன்னல்களையும் போக்கி, அமைதியான வாழ்க்கையை வேண்டி, இந்த நாளில், வராஹி அம்மன் வணங்கப்படுகின்றாள். 

நாள் 4 -  லட்சுமி. 
சகல செல்வங்களும் பெற்று செல்வசெளிப்போடு வாழ வேண்டி இந்த நாளில், லட்சுமி வணங்கப்படுகின்றாள்.

நாள் 5 - வைஷ்ணவி. 
ஆரோக்கியமும், ஆனந்தமும் நிறைந்த வாழ்க்கை வாழ அருள் பெற, வைஷ்ணவி தேவி வணங்கப்படுகின்றாள்.

நாள் 6 -  சாந்தி தேவி.  
நிம்மதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை பெற, இந்த நாளில் சாந்தி தேவி வணங்கப்படுகின்றாள்.

நாள் 7: அன்னபூரணி. 
எப்போதும் நிறைவான வாழ்க்கை பெற்று, அனைத்து உயிர்களும் பசியின்றி, ஆரோக்கியமான வாழ்க்கை பெற அன்னபூரணி இந்த நாளில் வணங்கப்படுகின்றாள்.

நாள் 8 - துர்கா. 
அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறவும், எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் எண்ணியபடி நிறைவேறவும், துர்க்கை அம்மன் இந்த நாளில் வணங்கப்படுகின்றாள்.

நாள் 9 - சரஸ்வதி. 
இந்த நாளில் ஞானத்தின் வடிவமான சரஸ்வதி தேவி வணங்கப்படுகின்றாள். இந்த தினம் அனைத்து மக்களாலும் கோலாகலமாக தமிழகம் எங்கும் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் மாணவர்கள், தொழில்புரிவோர்கள், அலுவலகம் செல்பவர்கள் என்று அனைவரும் தங்கள் புத்தகங்கள், தொழிலுக்கு உதவியாக இருக்கும் கருவிகள், இயந்திரங்கள், வாகனங்கள் என்று அனைத்தையும் கடவுளாக கருதி பூஜை செய்கின்றனர்.

நாள் 10 -  விஜயதசமி. 
இந்த நாளில், கொலுவில் இருக்கும் ஏதாவது ஒரு பொம்மையையோ அல்லது சரஸ்வதி பூஜை அன்று வைக்கப்பட்ட கருவிகள், புத்தகங்கள் என்று ஏதாவது ஒன்றையோ சற்று அதன் இடத்தில் இருந்து நகர்த்தி வைப்பார்கள்.

click me!