அலை பாயும் மனம் அமைதியடைய என்ன அபிஷேகம் செய்யணும் தெரியுமா?

First Published Sep 8, 2022, 7:31 AM IST

நாம் வேண்டிய அனைத்தும் கிடைத்துவிட்டால், கிடைத்த மகிழ்ச்சியில் இறைவனையும் மகிழ்விக்க அபிஷேகங்களையும், ஆராதனைகளையும், தர்ம காரியங்களையும் செய்வோம். எப்படி பரிகாரம் செய்து வேண்டுகிறோமோ அதேபோன்று அபிஷேகம் செய்தும் இறைவனிடம் வேண்டுவது உண்டு. ஆனால் அப்படி வேண்டும் போது வேண்டுவதற்கேற்ற பொருட்களை வைத்து அபிஷேகம் செய்தல் என்பது அவசியம்.

இறைவனிடம் பொதுவாக குபேரனாக்கு, செல்வங்களை கொடு, ஆயுளை அதிகரித்திடு, நோயில்லா வாழ்வை கொடு, வீடு பேறை அளி, நிம்மதி அளித்திடு என இப்படியான வழிபாடுகளை எல்லோரும் முன்வைக்கிறோம். இதுமட்டுமின்றி, திருமணத்தடை, குழந்தைப்பேறு, தொழிலில் தேக்கம், நல்ல வேலை என இவையனைத்தையும் வேண்டி பரிகாரம் செய்வதும் இறைவனிடம் தான்.
 

இப்படி நாம் வேண்டிய அனைத்தும் கிடைத்துவிட்டால், கிடைத்த மகிழ்ச்சியில் இறைவனையும் மகிழ்விக்க அபிஷேகங்களையும், ஆராதனைகளையும், தர்ம காரியங்களையும் செய்வோம். எப்படி பரிகாரம் செய்து வேண்டுகிறோமோ அதேபோன்று அபிஷேகம் செய்தும் இறைவனிடம் வேண்டுவது உண்டு. ஆனால் அப்படி வேண்டும் போது வேண்டுவதற்கேற்ற பொருட்களை வைத்து அபிஷேகம் செய்தல் என்பது அவசியம்.

இப்படியாக எந்த அபிஷேகத்திற்கு எந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும், அது என்ன பலன்களை கொடுக்கும் என்றும் முன்னோர்கள் அறிந்து வைத்துள்ளனர். அதனால் தான் குறைகளுக்கு ஏற்றவாறு அபிஷேகம் செய்து குறைகளை நிவர்த்தி செய்து கொண்டனர். அதோடு பிராத்தனைக்கு பின்னர் செய்யும் அபிஷேகத்தை விட, பிரார்த்திக்கும் போது செய்யும் அபிஷேகத்திற்கு பலன் நிச்சயம் உண்டு. இனி என்னென்ன திரவியம் என்னென்ன பலன்களை தரும் என்று பார்க்கலாம்.
 

மனம் அலை பாய்ந்து நிம்மதியின்றி பலர் தவித்து வருகின்றனர். அவர்கள் இறைவனுக்கு நெய் அபிஷேகம் செய்வதால் நிம்மதி உண்டாகும்.

குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகவும், உறவினர்கள் மத்தியில் உள்ள பிணக்குகள் தீர்ந்து அனைவரும் ஒருமித்து வாழ்ந்திட இளநீர் அபிஷேகம் செய்திட வேண்டும்.

இதுபோன்று ஆயுள் நீடிக்க சுத்தமான பசும்பாலினால் அபிஷேகம் செய்திட வேண்டும். குடும்ப சச்சரவுகள் நீங்க நல்லெண்ணெய் அபிஷேகமும், கடன் சுமையை குறைக்க மா பொடியினால் ஆன அபிஷேகமும், பிணிகள் அகல கரும்புச்சாறு அபிஷேகமும், மன அச்சத்தை போக்க எலுமிச்சைச் சாறு அபிஷேகமும், தடையில்லா செல்வம் உண்டாக பஞ்சாமிர்த அபிஷேகமும் செய்திட வேண்டும்.
 

முக்கியமாக புத்திர பாக்கியம் பெற வேண்டும் என்றால் பசுந்தயிரில் அபிஷேகம் செய்திட வேண்டும். அனைத்து பாவங்களும் நீங்க பஞ்சகவ்ய அபிஷேகம் செய்திட வேண்டும். இவ்வாறான வழிபாடுகளிலே சிறந்த வழிபாடு அபிஷேக வழிபாடு என கூறுகிறது ஜோதிட சாஸ்திரம். இறைவனிடம் வேண்டியதை நிறைவேற்றினால் அபிஷேகம் செய்து பூஜைகள் செய்கிறேன் என வேண்டுவதை விட, அபிஷேகம் செய்து வழிபடுங்கள்.
 

click me!