சதுரகிரியானது அற்புத சக்திகள் நிறைந்த சித்தர்கள் வாழக்கூடிய பூமியாக திகழ்கிறது. பௌர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் சித்தர்கள், ரிஷிகள் இங்கிருக்கும் சிவலிங்கத்திற்கு பூஜை செய்ய வருகிறார்கள். மதுரை மாவட்டத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்கு, விருதுநகர் வத்திராய்ப்பு பகுதியிலிருந்து செல்வது எளிதாக இருக்கும். தாணிப்பாறை மலை அடிவாரத்தில் தான் சதுரகிரி பயணத்தின் துவக்கம் இருக்கிறது. இங்கிருந்து 8 கி.மீ நீண்ட மலைப்பாதையின் துவக்கத்தில் இருக்கும் ஆசீர்வாத விநாயகரிடம் ஆசிர்வாதம் பெற்று பின் பாதையின் ஏற்ற, இறக்கத்தில் நடந்து செல்ல வேண்டும். இந்தப் பயணமானது ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோரக்கர் குகை, இரட்டை சிவலிங்கம், நாவல் ஊத்து, சின்ன பசுகடை, பெரியபசுகடை வழியாக நடந்தால் இறுதியாக பிலாவடிக் கருப்பர் ஆலயத்தில் பயணம் நிறைவடையும்.
பரிகாரம் செய்ய போறீங்களா.. முதல்ல இத பாருங்க..
இதற்கிடையில் காலாங்கிநாதர் உருவாக்கிய பிரம்மா தீர்த்தத்தில் நீராடினால் பாவம் அனைத்தும் தொலைந்து போகும் என்பது ஐதீகம். அகத்தியர் தான் சுந்தரமூர்த்தி லிங்கத்தை சதுரகிரியில் முதலில் பிரதிஷ்டை செய்தார். இந்த லிங்கத்தை பல சித்தர்களும் வணங்கி வழிபட்டதால் தான் இந்த லிங்கத்தின் சக்தி அபரிமிதமானது. இவரை வேண்டி வழிப்பட்டால் எந்தவொரு செயலும் வீனானதில்லை என்று தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.