Mantras : சக்தி மிகுந்தவையா மந்திரங்கள்?

First Published | Sep 8, 2022, 6:30 AM IST

‘மந நாத் த்ரா யாதே இதி மந்த்ர’ என ஒரு வடமொழி ஸ்லோகம் இருக்கிறது. அதாவது மனனம் செய்தால் காப்பாற்றுவது என்பதே இதன் பொருள். மந்திரத்திற்கு காக்கும் சக்தி உண்டா?

‘மந நாத் த்ரா யாதே இதி மந்த்ர’ என ஒரு வடமொழி ஸ்லோகம் இருக்கிறது. அதாவது மனனம் செய்தால் காப்பாற்றுவது என்பதே இதன் பொருள். மந்திரத்திற்கு காக்கும் சக்தி உண்டா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் உண்டு. நிச்சயம் உண்டு என்பதே இதற்கான பதில்.
 

பொதுவாகவே சப்தத்திற்கு ஒரு பொருளை இயங்க வைக்கவும், அதிர வைக்கவும் ஆற்றல் இருக்கிறது. மனிதனின் உடலில் கூட உயிர் என்ற சத்தம் மூலாதாரம் என உடலின் நடுப்பகுதியில் இருந்து துடிப்புகளாக அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இதனை தான் சித்தர் வாக்கியம் ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது’ என சொல்கிறது. ஏனென்றால் உயிர்சக்தி அண்டம் முழுவதும் பரவி இருக்கிறது. ஏன்.. நமது பஞ்ச பூதங்கள் கூட நாதத்தால் தான் இயங்குகிறது.

‘ஹம்’ என்ற மந்திரம் ஆகாயத்திற்கும்
‘யம்’ என்ற மந்திரம் காற்றுக்கும்
‘ரம்’ என்ற மந்திரம் நெருப்பிற்கும்
‘வம்' என்ற மந்திரம் நீருக்கும்
‘லம்’ என்ற மந்திரம் நிலத்திற்கும் சொந்தமானதாகும்.
 

Tap to resize

பஞ்சபூதங்கள் போன்று இறைவனுக்கும் தனித்தனியான மந்திரங்கள் உண்டு. குறிப்பாக கிருஷ்ண பரமாத்மா கீதையில் ‘உனக்கு நீதான் நண்பன், உனக்கு நீதான் விரோதி’ என்று கூறுவார். அதாவது அவரவர் பிரச்சனைகளுக்கான தீர்வு அவரிடமே உள்ளது. இப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் அவனிற்கான தனி மந்திரத்தை கொடுத்துவிட்டால், அவன் எந்த பரிகாரத்திற்கு வேறு எங்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை.
 

மந்திரங்கள் இப்போது தமிழில் வந்துவிட்டாலும், சித்தர்கள் வடமொழியில் மந்திரங்களை உச்சரித்தனர். வடமொழியை பொறுத்தவரையில் ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு அர்த்தம் உள்ளது. உதாரணத்திற்கு, ‘குரு' என்ற வார்த்தையில் ‘கு'என்ற எழுத்து இருளையும், 'ரு' என்ற எழுத்து அழித்தல் என்றும் பொருள்படும்.

இவ்வாறாக அறியாமையை அழிப்பவன் குருவாகிறான். அதேபோன்று 'நான்' என்ற வார்த்தையை 'அஹம்' என்று குறிப்பிடுவார்கள். இதில் 'அ' என்பது இறைவனையும் 'ஹ'என்பது மாயையும் குறிக்கிறது. மனிதற்குள் மறைந்திற்கும் இறைத்தன்மையையும் மாயை மறைக்கிறது என்று கூறலாம். இதுபோன்று மந்திர சாஸ்திரத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் சிறந்த நிலையை அடைய முடியும். இதில் முக்கியத்துவம் வாய்ந்தது மந்திரத்தைபயன்படுவதைக் காட்டிலும் அதனை பயன்படுத்தும்விதம் மற்றும் பயிற்சி போன்றவை தான்.

ஏனென்றால், மந்திரத்தை உச்சரிக்கும் போது நம் உடலில் 72 நாடிகளிலும் சலனம் ஏற்படுகிறது. மந்திரங்களை ஒருமுகத்தோடு உச்சரிக்கும் போது, மனம் ஒருமுகமாகி மனதில் இருக்கும் குழப்பத்தை அமைதிப்படுத்துகிறது. உலகிலிருக்கும் அனைத்து மதங்களிலும் மந்திரங்களை உச்சரிப்பது இருக்கிறது. அந்த மந்திரங்கள் மனிதனின் சக்தியை வெளிக்கொண்டுவரும் திறன் பெற்றது.
 

Latest Videos

click me!