Today Rasipalan 21st Mar 2023: ஃபோனில் வரும் சூப்பர் செய்தி..! நீண்டகால கடின உழைப்பிற்கு இன்று பலன் கிடைக்கும்

Published : Mar 21, 2023, 05:31 AM IST

மார்ச் 21ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

PREV
112
Today Rasipalan 21st Mar 2023: ஃபோனில் வரும் சூப்பர் செய்தி..! நீண்டகால கடின உழைப்பிற்கு இன்று பலன் கிடைக்கும்

மேஷம்:

இன்றைய தினம் உங்களுக்கு சாதகமானது. சரியான நேரத்தில் சரியான முடிவெடுங்கள். வாங்கல் - விற்றலில் ஈடுபடவேண்டாம்; இழப்பு ஏற்படக்கூடும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் தொழிலில் வெற்றி கிடைக்கும்.
 

212

ரிஷபம்:

முக்கியமான உறவினர்கள் வீட்டிற்கு வருவதால் பரபரப்பாக இயங்குவீர்கள். கோபத்தை குறைத்துக்கொள்ளவும். முக்கியமான நபர் ஒருவரின் ஆதரவும் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள்.
 

312

மிதுனம்:

ஃபோன் அல்லது ஈமெயிலில் நற்செய்தி வந்து சேரும். நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் வேலையில் வெற்றி கிடைக்கும். நெருங்கிய நண்பரிடன் ஆதரவால் உங்கள் துணிச்சல் அதிகரிக்கும். நண்பர் அல்லது உறவினரின் உதவியுடன் உங்கள் பிரச்னை முடிவுக்கு வரும். தொழிலில் பிசியாக இருப்பீர்கள்.
 

412

கடகம்: 

உங்கள் கடின உழைப்பிற்கான ரிசல்ட் கிடைக்கும். நீண்டகால பிரச்னை முடிவுக்கு வரும். அதனால் மன நிம்மதி அடைவீர்கள். வேலைகள் வேகமெடுக்கும். பொருளாதார மந்தநிலை ஏற்படும். அனுபவஸ்தரின் அறிவுரை தொழிலில் ஆதாயமளிக்கும்.
 

512

சிம்மம்:

இன்றைய தினம் உங்களுக்கு சாதகமானது. பொருளாதாரம் தொடர்பாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் ஆதாயம் அளிக்கும். இளைஞர்கள் கெரியர் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். புதிய தொழில் எதுவும் இப்போது தொடங்க வேண்டாம்.
 

612

கன்னி:

குழந்தைகளின் படிப்பு சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். ரொம்ப தாமதிக்காமல் சீக்கிரம் முடிவெடுக்கவும். தாமதித்தால் வாய்ப்பு பறிபோகலாம். தொழிலில் அதிக கவனம் செலுத்தவும். நிலையான வருமானம் இருக்கும். 
 

712

துலாம்:

ஆன்மீக செயல்பாட்டால் மனமும் உடலும் புத்துணர்வு பெறும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். பணம் ரீதியாக இப்போது நீங்கள் எடுக்கும் முடிவு இழப்பை ஏற்படுத்தும். முதலீடு செய்யும் திட்டமிருந்தால் ஒத்திவைக்கவும். தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். 
 

812

விருச்சிகம்:

உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் செய்யும் மாற்றம் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மன அமைதி நிலவும். ஒரு குறிப்பிட்ட விஷயம் சார்ந்த எதிர்மறை சிந்தனை மனதில் மேலோங்கும். தேவையில்லாத வாக்குவாதங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம். தொழில் சிறப்பாக இருக்கும். 

912

தனுசு:

குடும்பத்தினருடன் முக்கியமான விஷயம் குறித்து விவாதிப்பீர்கள். நம்பிக்கையின் மூலம் சாதிப்பீர்கள். அதீத உணர்ச்சிவசம் உங்களை பாதிக்கும். முக்கியமான முடிவு எதுவும் இன்று எடுக்க வேண்டாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
 

1012

மகரம்:

உங்கள் முக்கியமான திட்டங்கள் ஈடேறும் நாள். உங்கள் அனைத்து திறமைகளையும் பயன்படுத்த ஏற்ற நேரம். திடீர் செலவு வரும். அனுபவஸ்தர்களின் உதவியுடன் எடுக்கும் முடிவுகள் வெற்றியை தரும். மனைவி வழி உறவினர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும்.
 

1112

கும்பம்:

நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவுகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுங்கள். முக்கியமான பொருள் திருடுபோக வாய்ப்புள்ளது; கவனம் தேவை. தொழில் முறையில் ரகசியம் காப்பது அவசியம்.  கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
 

1212

மீனம்:

கோபத்தால் உறவுகளுடன் பிரச்னை ஏற்படலாம். அடுத்தவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். தொழில் ரீதியான எந்த புதிய முடிவும் எடுக்க வேண்டாம். கணவன் - மனைவி இடையேயான உறவு இனிமையாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். 
 

Read more Photos on
click me!

Recommended Stories