Today Rasipalan 11th Mar 2023: விபத்து கண்டம் யாருக்கு..? வீண் செலவை தவிர்க்க வேண்டியது யார்..?

Published : Mar 11, 2023, 05:30 AM IST

மார்ச் 11ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

PREV
112
Today Rasipalan 11th Mar 2023: விபத்து கண்டம் யாருக்கு..? வீண் செலவை தவிர்க்க வேண்டியது யார்..?

மேஷம்:

தேங்கிக்கிடந்த சொத்து விஷயத்தை முடிக்க முயற்சி செய்யுங்கள். வெளிநபர்கள் மற்றும் நண்பர்களின் அறிவுரைகளை கேட்கவேண்டாம். நீங்கள் சுயமாக முடிவெடுங்கள். தொழிலில் ரிஸ்க் எடுக்க வேண்டாம். 
 

212

ரிஷபம்:

வீட்டு பராமரிப்பில் நேரத்தை செலவழிப்பீர்கள். மாணவர்கள் படிப்பு விஷயத்தில் மந்தமாக இருப்பார்கள். பட்ஜெட்டை மனதில் வைத்து செலவு செய்யுங்கள். தொழிலில் வளர்ச்சி எதுவும் இருக்காது.
 

312

மிதுனம்:

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள். உங்கள் வேலைகள் அனைத்தும் சரியாக நடக்கும். அதனால் மன அமைதியும் நிம்மதியும் அடைவீர்கள். பொறாமையால் உங்கள் முதுகுக்கு பின் சிலர் விமர்சிப்பார்கள். அந்தமாதிரியான நபர்களிடமிருந்து விலகி இருங்கள்.

சர்ப்ப தோஷம் : தடைகளை தகர்த்தெறியும் சக்தி வாய்ந்த மந்திரம்!
 

412

கடகம்:

குழந்தையிடமிருந்து நல்ல செய்தி வரும். கோபத்தை குறைத்துக்கொள்ளவும். உங்கள் அமைதி மற்றும் நிதானமான இயல்புதான் உங்கள் மரியாதையை காப்பாற்றும்.
 

512

சிம்மம்:

மற்றவர்களை பொருட்படுத்தாமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். உங்கள் மனதை அலைபாய விடாமல் கட்டுப்படுத்து முக்கியம். இன்று உங்களது அனைத்து வேலைகளும் சுமூகமாக முடியும்.
 

612

கன்னி:

இன்று உங்களுக்கு லாபகரமான மற்றும் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். சோம்பல் தவிர்க்கவும். குழந்தைகள் நண்பர்களுடன் சேர்ந்து தவறான வழியில் செல்ல வாய்ப்புள்ளது. எனவே குழந்தைகளை கண்காணிக்கவும். யாருடனும் வாக்குவாதம் செய்யாமல் அமைதியாக இருக்கவும்.
 

712

துலாம்:

இன்று உங்களுக்கு நல்ல நேரம். இன்றைய தினம் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் நல்லவிதமாக செய்து முடிப்பீர்கள். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். ஆவணங்கள் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. 
 

812

விருச்சிகம்:

அரசியலில் முக்கியமான நபரை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சிறு பிரச்னை நிலவும். அதில் வெளிநபரை தலையிட அனுமதிப்பது, பிரச்னையை பெரிதாக்கும். பொருளாதாரத்தில் சிறந்த நாள்.  கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

உங்க குலதெய்வ கோயிலிலிருந்து இந்த 1 பொருளை கொண்டு வந்தால் போதும்.. கஷ்டங்கள் இருந்த இடம் தெரியாம காணம போகும்

912

தனுசு:

பொருளாதாரம் சார்ந்த திட்டத்திற்கு ஏற்ற நாள். வெற்றிக்காக கடுமையாக உழையுங்கள். முதலீடு செய்ய சரியான தினம். உங்கள் ரகசியம் வெளிப்படுவதால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படலாம். உங்கள் திறமைக்கான மதிப்பு கிடைக்கும்.
 

1012

மகரம்:

புகழ்பெற்ற நபருடனான தொடர்பால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். நண்பர்களின் பேச்சை கேட்டு செயல்படாமல் சுயமாக முடிவெடுக்கவும். பொருளாதார இழப்புக்கு வாய்ப்புள்ளது. தொழிலில் அனுபவம் வாய்ந்தவர்களுடன் ஆலோசனை செய்யவும்.
 

1112

கும்பம்:

யாரை பற்றியும் கவலைப்படாமல் உங்கள் மனதில் பட்டதை செய்யுங்கள். கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். சமூக சேவைகளில் ஈடுபடுவதால் உங்களுக்கு சிலர் பிரச்னைகளை கொடுக்க முயற்சி செய்வார்கள். வீட்டில் உள்ள மூத்தவர்கள் மீது அக்கறை காட்டுவதுடன், அவர்களது அறிவுரைகளை கேட்டு செயல்படுங்கள். 
 

1212

மீனம்:

இன்றைய தினம் முக்கியமான தகவல் கிடைக்கும். தேங்கிக்கிடந்த சொத்து தொடர்பான வேலை முடிவுக்கு வரும். மனதில் ஒருவித பயம் இருக்கும். உயரதிகாரிகளிடமிருந்து ஆதரவு கிடைக்கும். குடும்பச்சூழல் சிறப்பாக இருக்கும்.
 

Read more Photos on
click me!

Recommended Stories