நம்மில் பலரும் பல முயற்சிகள் செய்து ஒரு விஷயத்தை ஆரம்பித்து ஏதோ ஒரு காரணத்தினால் காரியம் பாதியில் நின்று விடும் அல்லது முடிக்கும் தருணத்தில் தடை படும். உதாரணமாக வேலை முயற்சியில் தடங்கல், திருமணத் தடங்கல், புத்திரத் தடங்கல், சொந்த வீடு கட்ட தடங்கல் அல்லது வியாபாரம் ஆரம்பிப்பதில் தடங்கல் என்று சொல்லி கொண்டே போகலாம்.
இம்மாதிரியான பல விஷயங்களில் ஈடுபடும் போது காரணமே இல்லாமல் அந்த விஷயங்கள் முழமையாக நடைபெறாமல் தடை பட்டுக் கொண்டே செல்லும். இதற்கு முக்கிய காரணம் சர்ப்ப தோஷம் என்றழைக்கப்படும் ராகு கேது தோஷம் தான்.
செய்யும் செயல்கள் அனைத்தும் தடைபடக் காரணமான ராகு கேது தோஷத் தை கட்டுப்படுத்த உதவும் சிறிய சக்தி வாய்ந்த மந்திரத்தை தான் இந்த பதிவில் காண உள்ளோம்.
ஜோதிட ரீதியாக சர்ப்ப தோஷம் என்பது மிக முக்கியமான ஒரு தோஷம். ராகு கேது எந்த இடத்தில், எந்த கிரகங்களுடன் உள்ளதோ அந்த கிரகங்களை தன் வசம் செய்து விடும் ஆற்றல் பெற்ற கிரகங்கள் ஆகும். ராசி அதிபதியை, நட்சித்திர அதிபதியை என அனைத்தையும் தன் வசம் செய்து கொள்ளும். மேலும் தன்னை பார்க்கும் கிரகங்களையும் தன் வசம் செய்து விடும் வல்லமை பெற்றது தான் இவ்விரு கிரகங்களும்.