முடி, நகம் வெட்ட எந்த நாள் சிறந்தது என்று தெரியுமா?

First Published Mar 28, 2023, 10:19 AM IST

nail, hair cutting day : இந்து மதத்தின் நம்பிக்கைகளின்படி, நகம், முடி ஆகியவற்றை வெட்டுவது, சவரம் செய்வது, சுப, அசுப விளைவுகளை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.  

இந்து மதத்தில் பல்வேறு நம்பிக்கைகளுடையது. நாள், நட்சத்திரம், கிழமை பார்க்காமல் எந்த காரியமும் செய்யமாட்டார்கள். ஏனென்றால் இந்து மதத்தில் எல்லாவற்றிற்கும் காரணமும் அர்த்தமும் உள்ளதாக நம்பப்படுகிறது. அந்த வகையில் வாரத்தில் சில தினங்களில் நகம், முடி வெட்ட நல்ல நாள்கள் அல்ல என்று சொல்லப்படுகிறது. சில நாள்கள் மட்டுமே இந்த செயல்களை செய்ய ஏற்றதாகக் கூறப்படுகிறது. மீத நாள்களில் நகம், முடி ஆகியவற்றை வெட்டுவதால் கிரகங்களின் தீய விளைவை நம் மீது ஏற்படுத்தும். பொருளாதார நெருக்கடி கூட நம் தலை மீது விழும். இந்த பதிவில் எப்போது முடி, நகம் வெட்டலாம், தாடியை சவரம் செய்யலாம் என்பதை இங்கு காணலாம். 

திங்கள்கிழமை நகம், முடி வெட்டலாமா? 

திங்கள்கிழமை என்றால் சந்திரனுடன் தொடர்பு கொண்டது. ஜோதிடத்தின் அடிப்படையில் பார்த்தால் சந்திரன் வம்சம், ஆரோக்கியத்தை குறிக்கிறது. நாம் திங்கள்கிழமை முடி, நகம் வெட்டினால் மன அழுத்தம் வரும் என்கிறது ஜோதிடம். வீட்டில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியம் சீராக இல்லாமல் பாதிப்புக்குள்ளாகும். உங்களுக்கும் நோய் பாதிப்பு வரலாம். 

செவ்வாய் கிழமை நகம், முடி வெட்டலாமா? 

செவ்வாய் கிழமை அனுமனுடன் தொடர்புடையது. செவ்வாய்கிழமை, செவ்வாய் கிரத்துடன் தொடர்புடையதாக ஜோதிட சாஸ்திரமும் கூறுகிறது. இந்த கிரகம் மிகவும் கடுமையான கிரகமாக சொல்லப்படுகிறது. தைரியம், துணிச்சல் இந்த கிரகத்துடன் தொடர்புடையது. இருந்தாலும், செவ்வாய்க்கிழமை அன்று நாம் நகங்கள் அல்லது முடிகளை வெட்டி கொள்வதால் கோபம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உங்களுடைய ஆயுள் குறையும் என்று நம்பப்படுகிறது. 

புதன் கிழமை நகம், முடி வெட்டலாமா?

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதன் கிழமை எல்லா காரியங்களையும் செய்ய ஏற்ற நாள். இந்த நாளில் சவரம் செய்வது, முடி, நகங்களை வெட்டுவது ஏற்றதாக கருதப்படுகிறது. குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். லட்சுமி ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். புதன் கிழமை அன்று முடி வெட்டினால் ஜாதகத்தில் புதனின் நிலை வலுவாகும். நல்ல வேலை கிடைக்கும். பேரும், புகழும் பெருகும்.  

வியாழன் கிழமை நகம், முடி வெட்டலாமா?

ஜோதிடத்தின்படி, வியாழன் கிரகத்துடன் வியாழக்கிழமை தொடர்பு கொண்டுள்ளது. வியாழன் மகாவிஷ்ணுவின் நாளாக சொல்லப்படுகிறது. வியாழக்கிழமை முடி வெட்டினால் வீட்டில் இருக்கும் லட்சுமி கடாட்சம் விலகிவிடும். வீட்டில் குடியிருக்கும் லட்சுமி கோபித்துக் கொண்டு வெளியேறுவார். ஜாதகத்தில் வியாழனின் அசுப விளைவுகளையும் சந்திக்கும் நிலை வரும். அதனால் மறந்தும் வியாழன் அன்று முடி, நகங்களை வெட்டாதீர்கள். 

வெள்ளிக்கிழமை நகம், முடி வெட்டலாமா?

வெள்ளிக்கிழமை மகாலட்சுமியுடன் தொடர்புடைய தினம். அதனால் அன்றைய நாள் முடி, நகங்களை வெட்டிக் கொள்வது மங்களகரமானது என நம்பப்படுகிறது. வெள்ளி முடி, நகம் வெட்டி கொள்வதால் வெற்றி வாய்ப்பு அதிகமாகும். புகழும், செல்வமும் பெருகும். 

சனிக்கிழமை நகம், முடி வெட்டலாமா?

சனிக்கிழமை முடி, நகங்களை வெட்டக் கூடாது. சனி அன்று நகம், முடி வெட்டினால் அகால மரணம் ஏற்படலாம். பொருளாதார நெருக்கடி வரலாம். சனிக்கிழமை முடி வெட்டுவது, சவரம் செய்வது பித்ரு தோஷம் நீங்கும். 

இதையும் படிங்க:சுகர் நோயாளிகளே! இந்த தவறை மறந்தும் பண்ணாதீங்க..1 நிமிஷத்துல சர்க்கரை அளவு எகிறிடும்

ஞாயிற்றுக்கிழமை நகம், முடி வெட்டலாமா? 

ஞாயிற்றுக் கிழமை அன்று முடி வெட்டக் கூடாது. மஹாபாரத கூற்றுப்படி, சூரியனின் நாளான ஞாயிரன்று நகங்கள், முடியை வெட்டுவது செல்வம், ஞானத்தை அழித்துவிடும் என நம்பப்படுகிறது. முடி, தாடியை சவரம் செய்யக் கூடாது. 

புதன், வெள்ளி ஆகிய நாள்களில் முடி, நகங்களை வெட்டிக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.    

இதையும் படிங்க: புதினா இலையை சும்மா நினைக்காதீங்க.. கொஞ்சம் வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், இத்தனை நன்மைகள் இருக்கு!

click me!