Today Rasipalan 28th Mar 2023: மற்றவர்களின் ஆலோசனையை கேட்டால் அவஸ்தை தான்..! ஓவரா யோசித்து கோட்டைவிட்ராதீங்கர

Published : Mar 28, 2023, 05:30 AM IST

மார்ச் 28ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

PREV
112
Today Rasipalan 28th Mar 2023: மற்றவர்களின் ஆலோசனையை கேட்டால் அவஸ்தை தான்..! ஓவரா யோசித்து கோட்டைவிட்ராதீங்கர

மேஷம்:

நன்றாக யோசித்து எச்சரிக்கையுடன் எடுக்கும் முடிவு சாதகமான முடிவை தரும். வீட்டில் இருக்கும் மூத்தவர்களின் அறிவுரை பயனளிக்கும். குழந்தைகள் மூலம் கிடைக்கும் நற்செய்தியால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மோசமான சூழல்களில் பொறுமையாக இருக்கவும். 
 

212

ரிஷபம்:

தேங்கிக்கிடந்த வேலைகள் முடியும். உங்கள் கடின உழைப்பில் சமரசம் செய்துகொள்ளவேண்டாம். உங்கள் நண்பர்களால் பிரச்னை ஏற்படலாம். அதனால் அவர்களது பேச்சுகளை நம்பவேண்டாம். தொழிலில் அனுபவஸ்தர்களுடன் தொடர்பில் இருங்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 
 

312

மிதுனம்:

சீனியர்களின் வழிகாட்டுதலில் அனைத்து வேலைகளையும் சுமூகமாக செய்து முடிப்பீர்கள். நெருங்கிய நபருடனான கருத்து வேறுபாடு நீங்கி, இனிமையான உறவு மலரும். சரியான நேரத்தில் சரியான முடிவெடுங்கள். 
 

412

கடகம்:

உங்கள் அன்றாட வேலைகள் சுமூகமாக நடக்கும். நெருங்கிய நண்பர்களை சந்திப்பீர்கள். புதிய தொழில் எதுவும் தொடங்க வேண்டாம். இப்போதைய தொழில் அல்லது வேலையையே தொடருங்கள். நீங்கள் பணியாற்றும் முறை அல்லது தொழில் ரகசியத்தை வெளிநபர்களிடம் சொல்ல வேண்டாம். கணவன் - மனைவி இடையேயான பிரச்னை குடும்ப சூழலையும் கெடுக்கும்.
 

512

சிம்மம்:

உங்கள் தொடர்புகளை பலப்படுத்துங்கள். அது உங்களுக்கு பலவகைகளில் ஆதாரமளிக்கும். ஆன்மீக ஈடுபாடு மனதிற்கு அமைதி அளிக்கும். அதீத நம்பிக்கை மற்றும் ஆக்ரோஷம் உங்களை பாதிக்கும். பட்ஜெட்டை மனதில் வைத்து செயல்படவும். தொழில் விஷயங்களையும் யாரிடமும் பகிர வேண்டாம்.
 

612

கன்னி:

அரசியல் தொடர்புகள் பலப்படும். உங்களது முக்கியமான வேலையை அவர்கள் செய்து கொடுப்பார்கள். குடும்ப பிரச்னையை நினைத்து கவலைப்படுவீர்கள். பொறுமையாகவும் நிதானமாகவும் இருந்து பிரச்னைகளை தீருங்கள். 

712

துலாம்:

சில சவால்களை எதிர்கொள்ள நேரும். எதிர்பாராத திடீர் செலவுகள் உங்களை கஷ்டப்படுத்தும். தொழிலில் இருந்துவந்த பிரச்னைகள் முடிந்து, வேலைகள் வேகமெடுக்கும். பொருளாதார நிலை மேம்படும்.
 

812

விருச்சிகம்:

பிரச்னைகளை நினைத்து கவலைப்படாமல் அவற்றை தீர்க்க முயலுங்கள். எதிர்மறை சிந்தனைகள் மேலோங்க விடாதீர்கள். நேர்மறையாகவே சிந்தித்து செயல்படுங்கள். நீங்கள் செய்த வேலைக்கான கிரெடிட்டை வேறு யாராவது பெறுவார்கள். வேலை பரபரப்புக்கு மத்தியில் குடும்பத்தினருடனும் நேரம் செலவிடுங்கள்.
 

912

தனுசு:

சர்ச்சைகளிலிருந்து விலகியிருங்கள். உங்கள் செயல்பாடுகளை ரகசியமாக வைத்திருப்பது நல்லது. புதிய வேலை எதுவும் தொடங்குவதாக இருந்தால் உடனே செய்து முடியுங்கள். தாமதப்படுத்த வேண்டாம்.
 

1012

மகரம்:

ஆன்மீக விஷயங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தினருடன் ஷாப்பிங் செய்து மகிழ்வீர்கள். அண்மைக்காலமாக இருந்துவரும் பிரச்னை தீரும். உங்கள் வேலையை மட்டும் செய்யவும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். நண்பர்கள் மற்றும் வெளிநபர்களின் ஆலோசனையை ஏற்கவேண்டாம். உங்கள் தொடர்புகளை பலப்படுத்துங்கள். ரிஸ்க்கான விஷயங்களில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம்.
 

1112

கும்பம்:

உங்கள் பிரச்னையிலிருந்து வெளிவந்து நிம்மதி அடைவீர்கள். உங்கள் பிரபலமும் அதிகரிக்கும். ரொம்ப யோசித்தீர்கள் என்றால், சரியான நேரத்தில் முடிவெடுக்க முடியாது. கடன் கொடுக்கும்போது கவனம் வேண்டும். 

1212

மீனம்:

முக்கியமான நபருடனான சந்திப்பின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். தவறான நபர்களுடனான உறவு, உங்கள் இலக்கை நோக்கி பயணிக்க தடையாக அமையும். தொழிலில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.

 

Read more Photos on
click me!

Recommended Stories