இந்த நபர்களை அவமானம் செஞ்சா நரகத்தில் ஜந்துக்கள்கிட்ட மாட்டி, பிசாசுகளுடன் வாழணும்.. எச்சரிக்கும் கருட புராணம்

First Published | Jan 30, 2023, 10:21 AM IST

Garuda Purana: நம் வாழ்வில் சந்திக்கும் சில மனிதர்களை இழிவுபடுத்துவது பேராபத்து என கருட புராணம் கூறுகிறது. 
 

இந்து மதத்தில் மிகவும் முக்கியமானதாக கருட புராணம் கருதப்படுகிறது. இதில் உள்ள விதிகளைப் பின்பற்றுபவர்கள் மரணத்திற்குப் பின் சொர்க்கத்தை அடைவார்கள் என்பது ஐதீகம். கருட புராணம் விஷ்ணுவின் வடிவமாக கருதப்படுகிறது. இதில் பகவான் விஷ்ணு தனது பிரியமான வாகனமான கருடனிடம் வாழ்வு, இறப்பு, புண்ணியம், பாவம் பற்றி விரிவாக கூறுகிறார். 

எந்தச் செயல்கள் மனிதனை நரகத்தில் அல்லது சொர்க்கத்தில் கொண்டு சேர்க்கும் என கருட புராணம் கூறுகிறது. இதில், பகவான் விஷ்ணு ஒருவன் தன் வாழ்நாளில் ஐந்து பேரை அவமதிக்கக் கூடாது என்கிறார் . அவர்களை அவமதிப்பது மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும். அதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். 

Latest Videos


பெற்றோர், குரு, ஆச்சார்யர், வழிபாட்டாளர்களை அவமதிக்கக் கூடாதாம். அப்படி அவமதிப்பவர்கள் தாங்கள் இறந்த பிறகு நரகத்திற்கு செல்வார்கள் என கூறப்படுகிறது. முதலாவதாக, தங்கள் குழந்தைகளின் சிறந்த நலன்களை எப்போதும் வளர்க்க விரும்பும் பெற்றோரை, அவர்களின் பிள்ளைகள் கடவுளின் வடிவமாக வணங்க வேண்டும். அவர்களை அவமதிப்பது பாவம். 

இதையும் படிங்க: சாம்பல் பூசி பிணத்துடன் கொடூரமாக உடலுறவு கொள்ளும் அகோரிகள்.. திகிலூட்டும் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்?

ஆசிரியர்களை அவமதிப்பதால், தீங்கு ஏற்படும். வியாழன் பிரம்மாவின் ஒரு வடிவமாகக் கருதப்படுவதால், அவர் மூலமாகவே ஒருவர் தனது வாழ்க்கையில் வெற்றியையும் புகழையும் பெறுகிறார். குருக்களையும், ஆச்சார்யர்களையும் அவமதிப்பது தெய்வங்களை அவமதிப்பது போன்றது. அவரை எப்போதும் கடவுளாக மதிக்க வேண்டும், வணங்க வேண்டும். அப்படி வழிபட்டால் வாழ்வில் வெற்றி என்றும் வசப்படும்.

வழிபாட்டாளரை ( worshiper) அவமதிப்பது என்பது முனிவர்களையும், துறவிகளையும் அவமதிப்பதாகும் என்று பகவான் விஷ்ணு விளக்குகிறார். இப்படி அவமானம் செய்பவர் பாவம் செய்கிறார். அப்படிப்பட்டவன் வைதரணி நதியில் தண்டிக்கப்படுகிறான். வைதரணி நதி என்றால் கொடிய மிருகங்களும், பிசாசும் வாழும் நதி. இங்கே செல்லும் பாவிகள் ஜந்துக்களால் துன்பம் அனுபவிப்பர். மேலே குறிப்பிட்ட நபர்களை மட்டுமல்ல சக மனிதர்களையும் மதித்து வாழுதல் தான் அறம் கொண்ட வாழ்க்கை. அதையே வாழுங்கள். 

அன்பான வாசகர்களே, இந்த கருத்துக்கள் அனைத்தும் புராணங்கள் அடிப்படையிலும், ஜோதிட நம்பிக்கைகள் அடிப்படையிலும் எழுதப்பட்டவை. அறிவியல்பூர்வமானதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: எக்காரணம் கொண்டும் வீட்டின் இந்த திசையில் குப்பை தொட்டியை வைக்கவே கூடாது.. மீறி வைத்தால் என்னாகும் தெரியுமா?

click me!