குலதெய்வத்தை மனதில் கொண்டு இந்த பரிகாரத்தை செய்யுங்கள். ஒரு சுத்தமான வெள்ளைத் துணியை எடுத்து, அதில் குடும்பத்தில் காலமான முன்னோரின் பெயர்களை எழுத வேண்டும். உங்களுக்கு நினைவில் இருக்கும் எல்லா முன்னோரின் பெயரையும் எழுதிவிடுங்கள். விரலி மஞ்சள் துண்டு, வெத்தலை, பாக்கு, நெல், அட்சதை, 1 ரூபாய் நாணயம் போன்ற பொருள்களுடன் முன்னோரின் பெயர் எழுதிய துணியையும் ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிச்சு போட்டு எடுத்து கொள்ளுங்கள். இதை பூஜை அறையில் வைத்து விட வேண்டும். இந்த மஞ்சள் முடிச்சுக்கு நாள்தோறும் பூஜையின் போது தூப ஆராதனை (ஊதுவத்தி, சாம்பிராணி காட்டுதல்) செய்ய வேண்டும். இந்த வழிபாட்டின் போது முன்னோரையும், குலதெய்வத்தையும் மனதார வேண்டி கொள்ள வேண்டும். இந்த விஷயத்தை செய்து பார்த்தால் நிச்சயம் மாற்றத்தை உணருவீர்கள். குடும்ப பிரச்சனைகள் ஓய்ந்து வாழ்வில் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள்.