இந்து மதத்தில், மரணம் ஒரு முடிவாகக் கருதப்படுவதில்லை. ஏனென்றால் இந்துக்கள் மறுபிறவி என்ற கருத்தை நம்புகிறார்கள். இறந்தவரின் ஆன்மா வேறொரு உடலில் மறுபிறவி எடுப்பதாக நம்பப்படுகிறது. இங்கு ஒருவர் இறந்த பிறகு பல்வேறு பழக்கவழக்கங்கள், மரபுகள் பின்பற்றப்படுகின்றன. இறந்த நபரின் ஆடைகளை அணிவதைத் தவிர்க்க அறிவுறித்துவதும் அத்தகைய பாரம்பரியம் தான். இது ஏன் முக்கியமாக கருதப்படுகிறது என்பதை இங்கு காணலாம்.
இறந்தவர்களின் ஆடைகளை ஒருபோதும் அணியக்கூடாது என்பதற்கான முக்கிய காரணம், அது மிகவும் அதிர்ச்சியளிக்கும் அனுபவம். தங்களின் அன்புக்குரியவர்கள் இறந்த பிறகு அவர்களின் ஆடைகளை அணிந்துகொண்டு சிலர் பழைய நினைவுகளை மீட்டெடுக்கலாம். இது அவர்களுடைய மனதைக் கவரும். அவர்கள் அருகாமையில் இருப்பது போன்ற உணர்வு தரும்.
இறந்த நபரின் ஆடைகளை மீண்டும் மீண்டும் அணிவது ஒருவரை மனச்சோர்வடையச் செய்யும். பெரும் இழப்பை உணரும் நினைவுகளைத் திரும்பக் கொண்டுவரும். எனவே, இறந்தவரின் ஆடைகளை அணிவதைத் தவிர்ப்பது நல்லது. இதை ஜோதிடமும் கூறுகிறது.
இதையும் படிங்க: வீட்டிற்கு பாம்பு வருவது நல்லதா? கெட்டதா?
ஜோதிடத்தின்படி, இறந்தவரின் ஆடைகளை எப்போதும் தானமாக வழங்க வேண்டும். ஏனெனில் அவர்களின் ஆடைகளை தானம் செய்வது பிரிந்த ஆத்மா சாந்தி அடைய உதவும் என்று நம்பப்படுகிறது. இது தானமாக கொடுப்பவர்களுக்கு ஆசீர்வாதத்தைத் தரும் ஒரு உன்னத செயலாகக் கருதப்படுகிறது.
பிரிந்த அன்புக்குரியவரின் ஆடைகளை தானமாக வழங்குவது அவர்களின் நினைவை போற்றும் விஷயம். அதே நேரத்தில் ஒரு நல்ல செயலைச் செய்வதற்கும் ஒரு வழியாகும்.
இதையும் படிங்க: சுப காரியங்களை செய்யும் போது தும்மினால் என்னாகும் தெரியுமா? எப்படி தும்மினால் என்ன பலன்!!