ஆனால் நம்மில் பலருக்கும் ஒரு பெரிய சந்தேகம் உண்டு சனிக் கிழமைகளில் நவக்கிரக வழிபாட்டின் போது பலரும் 7 சுற்றுகளை வலப்புறமாகவும் , ராகு கேதுவிற்கான கடைசி 2 சுற்றுகளை இடப்புறமாகவும் சுற்றுவதை பார்த்து இருப்போம். இப்படி இடப்புறமாக யார் சுற்றலாம் ,யார் சுற்றக் கூடாது?
நவகிரகங்களில் 7 கிரகங்கள் நேராக சுற்றும். ராகு கேது மட்டும் எதிராக சுற்றும் . மேலும் இவ்விரு கிரகங்களும் நகரும் போதும் அவை பின்னோக்கி தான் நகருகிறது . ஆகையால் ராகு,கேதுவிற்கான சுற்றுகளை பின்னோக்கி சுற்றினால் தான் முழுப்பலனும் கிடைக்கும் என்று பலர் சொல்லி பார்த்து இருப்போம். இது முற்றிலும் தவறான கருத்தாகும்.
ராகுவையும்,கேதுவையும் நவக்கிரகங்களோடு இனைத்த பிறகு, நவக்கிரங்ககளுக்கு சுற்றுகின்ற முறை என்பது 9ஆக கணக்கிடப்பட்டு ஒரே முறையில் தான் நாம் சுற்ற வேண்டும். இதுவே முறையாகும் .
யார் அப்பிரதட்சணம் (எதிர்புறமாக ) சுற்ற வேண்டும். ?
பரிகாரத்திற்காகவும், தோஷ நிவர்த்திக்காகவும் ஜோதிடர்களால் கூறப்பட்டு ராகு,கேது சாந்தி பூஜையை மேற்கொள்ளும் போது சிலர் அப்பிரதட்சணம் அதாவது எதிர்புறமாக சுற்றுவார்கள் . அவர்கள் சுற்றுகிறார்கள் என்று ஒரு சிலர் தாங்களும் இடப்புறமாக சுற்றத் தொடங்குவார்கள். இந்த தவறை ஒரு போதும் செய்து விட வேண்டாம்.