ஆன்மீகத்தில் கருப்பு மிளகு பல பரிகாரங்களை செய்வதற்கு நமக்கு உதவுகிறது. சனி தோஷம் இருக்கும் நபர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அவர்களை தோஷத்திலிருந்து மீட்கக்கூடிய சக்தி கருப்பு மிளகிற்கு உள்ளது. கருப்பு மிளகு நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அது மட்டுமில்லாமல், ஜாதகத்தில் நமக்கு ஏற்படும் கிரக தோஷங்களையும் கருப்பு மிளகு அபாரமாக செயல்பட்டு நீக்குகிறது. சனி கொடுக்கும் துன்பங்களிலிருந்து விடுதலை அடைய கருப்பு மிளகு, கருப்பட்டி ஆகியவை நமக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.