புதன் பெயர்ச்சி 2023: இந்த 3 ராசிகளுக்கும் இனி பணமழைதான்! சொந்த வாகனம் வாங்கும் யோகம் யாருக்கு??

Published : Jun 01, 2023, 10:08 AM IST

Mercury Transit In Taurus 2023: புதன் ரிஷபம் செல்வதால் ஜூன் 07ஆம் தேதி முதல் 3 ராசிக்காரர்களின் பொருளாதாரம் மேம்படும். யார் அந்த அதிர்ஷ்டக்காரர்கள் தெரியுமா? வாங்க பார்க்கலாம். 

PREV
14
புதன் பெயர்ச்சி 2023:  இந்த 3 ராசிகளுக்கும் இனி பணமழைதான்! சொந்த வாகனம் வாங்கும் யோகம் யாருக்கு??

ஜோதிட சாஸ்திரங்களின்படி, கிரகங்களின் ராசி மாற்றம் மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் ஒன்றான புதன் நம் புத்திசாலித்தனம், பேச்சாற்றல், வணிகம், பொருளாதாரம் போன்றவற்றின் காரணியாக நம்பப்படுகிறார். தற்போது மேஷ ராசியில் புதன் பயணிக்கிறார். வருகின்ற ஜூன் 07 ஆம் தேதி புதன் சுக்கிரன் ஆளும் ரிஷப ராசிக்குள் நுழைவார். இதனால் மூன்று ராசிகள் பலன் பெறுகின்றன. 

 

24

கன்னி

கன்னி ராசியை பொறுத்தவரை 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆளுமையில் மாற்றம் வரும். வியாபாரிகளுக்கு தொட்டது எல்லாம் துலங்கும். வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். இழுபறியில் இருக்கும் வேலை முடியும். பணிபுரிபவர்களுக்கு நல்ல ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நல்ல லாபம் தரும் வணிக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது

34

மகரம்

மகர ராசிக்கு ஐந்தாவது வீட்டிற்கு புதன் செல்வது நல்ல பலன்களை அளிக்கும். ஏற்கனவே நீதிமன்ற வழக்குகளில் இழுபறி காணப்பட்டால் இப்போது நல்ல தீர்ப்பு கிடைக்கும். இனி அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வரும். எந்த வேலை எடுத்தாலும் அதில் வெற்றி காண்பீர்கள் பொருளாதார ரீதியாக இந்த நேரம் உங்களுக்கு மங்களகரமானதாக இருக்கிறது பழைய முதலீடுகள் இப்போது லாபத்தை ஈட்டி தரும் குழந்தைகளால் சில நல்ல செய்திகள் கிடைக்கும் காதல் திருமண வாழ்க்கை இனிமை காணும். 

44

மீனம் 

மீன ராசிக்கு மூன்றாவது வீட்டுக்கு புதன் செல்வது வாகனம், சொத்து ஆகியவை வாங்கும் வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த நேரத்தில் தாயின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேறு பணிக்கு மாறத உள்ளவர்களுக்கு இது சாதகமான நேரம்; விரும்பிய வேலைவாய்ப்பு உங்களை தானாக தேடி வரும். வீரமும் தைரியமும் பெருகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். ஏனெனில் இப்போது மீன ராசிக்கு ஏழரை சனி நடக்கிறது. 

இதையும் படிங்க: வைகாசி விசாகம் 2023: நினைத்த காரியம் நிறைவேற இப்படி விரதமிருந்தால் முருகபெருமான் அருளை வாரி வழங்குவார்!!

click me!

Recommended Stories