
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு. நிலம் வாங்குவது, வீடு கட்டுவது, வீட்டில் வாங்கும் பொருட்கள் மற்றும் அதன் பொருட்களை வைப்பதற்கான இடம் என எல்லாவற்றிற்கும் வாஸ்து விதிகளை தான் பின்பற்றுவார்கள். வாஸ்து விதிகளை முறையாக பின்பற்றினால் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி செழிப்பு இருக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கை.
அந்த வகையில், வீட்டில் உள்ள மற்ற இடங்கள் மற்றும் பொருட்களை போலவே வீட்டின் கிச்சனுக்கும் வாஸ்து மிகவும் முக்கியம். வாஸ்துபடி வீட்டின் கிச்சனின் திசை மற்றும் கிச்சனில் பூசப்படும் பெயிண்டிங் நிறம் என எல்லாவற்றையும் மனதில் வைத்திருந்தால் வீட்டில் செழிப்பு மற்றும் மகிழ்ச்சி நீடித்திருக்கும். முக்கியமாக செல்வம் குவியும் என்று நம்பப்படுகிறது. வாஸ்துபடி, வீட்டின் சுவர்களின் வண்ணங்கள் எவ்வளவு முக்கியமோ அதுபோலதான் வீட்டின் கிச்சன் சுழற்சி நிறமும் மிகவும் முக்கியமானது. அந்த வகையில் உங்கள் வீட்டில் செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை மேம்படுத்தவும், செல்வம் குவியவும், வாஸ்துபடி உங்கள் வீட்டின் கிச்சன் எந்த நேரத்தில் இருக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: இன்றே இந்த பொருட்களை சமையலறையில் இருந்து தூக்கி எறியுங்கள்; இல்லையெனில் வறுமைக்கு ஆளாவீர்!
மஞ்சள் நிறம்:
வாஸ்துபடி இந்த நிறம் வீட்டிற்கு மங்களகரமானதாக கருதப்படுகிறது. எனவே, உங்கள் வீட்டின் சமையலறையின் சுவர் இந்த நிறத்தில் இருந்தால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். மஞ்சள் நிறம் வீட்டிற்கு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வத்தை கொண்டு வரும். எனவே உங்களது கிச்சனை பிரகாசமாக்க எலுமிச்சை அல்லது தங்கம் போன்ற மஞ்சள் நிறத்தை சுவற்றில் அடியுங்கள்.
சிவப்பு நிறம்:
சிவப்பு நிறம் தைரியம் மற்றும் துடிப்பான நிறம் என்பதால், வாஸ்துபடி இந்த நிறம் புலன்களை தூண்டில் பசியை அதிகரிக்கச் செய்யும் என்று நம்பப்படுகிறது. எனவே உங்கள் வீட்டில் சமையலறையின் சுவற்றில் சிவப்பு நிறத்தை அடித்து, உற்சாகம் மற்றும் தூண்டுதல் சூழ்நிலை உருவாக்குங்கள்.
நீல நிறம்:
இந்த நிறம் அமைதி மற்றும் சில தன்மையை குறிப்பதால், வாஸ்துபடி இந்த நிறம் சமையல் அறையில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே உங்களது கிச்சனில் அமைதியான சூழலை உருவாக்க விரும்பினால் கிச்சன் சுவரில் வானம் அல்லது கடல் போன்ற நீல நிறத்தை பயன்படுத்துங்கள்.
வெள்ளை நிறம்:
இந்த நிறம் தூய்மை மற்றும் எளிமையை குறிப்பதால், வாஸ்துப்படி இந்த நிறம் உங்கள் வீட்டின் சமையலறைக்கு அமைதியை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. உங்கள் வீட்டின் கிச்சனை பிரகாசமாக விரும்பினால் சுவற்றில் வெள்ளை நிறத்தை அடியுங்கள்.
பச்சை நிறம்:
பச்சை வளர்ச்சி, நல்லிணக்கம் மற்றும் அமைதியை குறிப்பதால், வாஸ்துபடி இது நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது எனவே, உங்கள் வீட்டின் கிச்சனில் அமைதியான சூழலை நீங்கள் உருவாக்க விரும்பினால் ஆலிவ் அல்லது புதினா நிறத்தில் இருக்கும் பச்சை நிறத்தை பயன்படுத்துங்கள்.
இதையும் படிங்க: வாஸ்துபடி, உங்கள் கிச்சனில் இந்த பொருள்கள் இப்படி வையுங்கள்.. இனி பண கஷ்டம் வரவே வராது..!!