Mehndi During Pregnancy in Tamil
கைகளில் மருதாணி வைப்பது பல நூற்றாண்டுகளாகவே உள்ளது. இது திருமணத்தில் முதன்மையாக கருதப்படுவது மட்டுமில்லாமல் மகிழ்ச்சி, கொண்டாட்டம் மற்றும் நேர்மறை ஆற்றலின் அடையாளமாகவும் இருக்கிறது. பண்டிகைகள் மற்றும் பல திருமண சடங்குகளின் போது பெண்கள் தங்கள் கைகளை மருதாணி வைத்து அழகு படுத்துகிறார்கள். ஆனால் எல்லாருடைய மனதிலும் எழும்பும் ஒரு கேள்வி என்னவென்றால், கர்ப்ப காலத்தில் கைகளில் மருதாணி வைக்கலாமா.. கூடாதா என்பது தான். ஏனெனில் இது சமயத்தில் கர்ப்பிணி பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவதால் அவர்கள் பல விஷயங்களை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஜோதிட சாஸ்திரத்திலும் கர்ப்பிணி பெண்கள் செய்யக்கூடாத பல விஷயங்கள் உள்ளன. எனவே இப்போது இந்த பதிவில் ஜோதிட சாஸ்திரத்தின் படி கர்ப்பிணி பெண்கள் கைகளில் மருதாணி வைக்கலாமா.. கூடாதா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Mehndi During Pregnancy in Tamil
மருதாணியும் ஜோதிடமும்:
ஜோதிட சாஸ்திரத்தின் படி, மருதாணி என்பது வீனஸ் கிரகத்துடன் தொடர்புடையது. இது அழகு, மகிழ்ச்சி, அன்பு மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை குறிக்கிறது. பெண்கள் மருதாணியை கையில் வைப்பதால் வீனஸ் கிரகத்தின் ஆற்றல் அதிகரிக்கும். மேலும் நல்லிணக்கம் செழிப்பு வரும். இதனால் தான் பெண்கள் தங்களது கைகளில் மருதாணி வைப்பது நல்லது என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள். அதுமட்டுமின்றி வீனஸ் கிரகம் அழகை பிரதிபடுத்துவதால் பெண்கள் கைகளில் மருதாணி வைப்பது அவர்களுக்கு அழகை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி மருதாணி உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். எனவே பெண்கள் கைகளில் மருதாணி வைப்பது நல்லது.
இதையும் படிங்க: கர்ப்பகாலத்தில் 'கால்' வீங்குதா? 'இப்படி' ஃபாலோ பண்ணா உடனே குறையும்!!
Mehndi During Pregnancy in Tamil
கர்ப்ப காலத்தில் மருதாணி வைக்கலாமா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கர்ப்பிணி பெண்கள் கைகளில் மருதாணி வைக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் இந்த சமயத்தில்தான் எந்த கிரகங்களின் தாக்கங்கள் அதிகரிக்கும். அதுவும் குறிப்பாக மருதாணி வீனஸ் கிரகத்துடன் தொடர்புடையது என்பதால், பெண்ணின் ஜாதகத்தில் வீனஸ் பலவீனமாக இருந்தால் அந்தப் பெண் மருதாணி வைப்பது நேர்மை ஆற்றலுக்கு பதிலாக, எதிர்மறை ஆற்றலை இருக்கும். கூடுதலாக, இது அவரது உணர்ச்சி மற்றும் மனநிலையை மோசமாக பாதிக்கும் இதனால் தேவையற்ற மன அழுத்தம் தான் ஏற்படும். மேலும் கர்ப்ப காலத்தில் பெண்ணின் ஜாதகத்தில் சனி, ராகு அல்லது கேது வலுவாக இருந்தால், அந்தப் பெண் மருதாணி வைத்தால் கவலை மற்றும் பிரச்சனை ஏற்படும். எனவே இத்தகைய சூழ்நிலையில் அசுப கிரகங்களின் தாக்கங்கள் அதிகரிப்பதை தவிர்க்க கர்ப்பிணி பெண்கள் மருதாணி வைப்பதைத் தவிர்க்க வேண்டுமென்று ஜோதிடர்கள் சொல்லுகின்றனர்.
Mehndi During Pregnancy in Tamil
கர்ப்ப காலத்தில் கைகளில் மருதாணி வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் அதிக வெப்பம் சுரப்பதால் சோர்வு, அமைதியின்மை, எரிச்சல் போன்ற உணர்வுகள் ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில் மருதாணி இலைகள் குளிர்ச்சியானது என்பதால் இது உடலை தளர்த்தும் மற்றும் வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்கும். மருதாணி உடல் சூட்டை தணிப்பது மட்டுமில்லாமல் சருமத்திற்கு குளிர்ச்சியை தருவதோடு அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. இருப்பினும் மருதாணியில் இருக்கும் குளிர்ச்சியான விளைவு சில பெண்களுக்கு அதிகப்படியான குளிர்ச்சியை ஏற்படுத்தி விடும் . இதனால் சளி, காய்ச்சல் இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் எனவே அதை பயன்படுத்துவதற்கு முன் உங்களது உடலில் நிலையை புரிந்து கொண்டு மருத்துவர் அணுகிய பின்னரே பயன்படுத்தவும்.
முக்கிய குறிப்பு : கர்ப்ப காலத்தில் செயற்கை மற்றும் ரசாயனம் கலந்த மருதாணியில் இருந்து விலகி இருங்கள். ஏனெனில் அவற்றில் இருக்கும் சில ரசாயனங்கள் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். இது கர்ப்ப காலத்தில் மோசமான தீங்கு விளைவிக்கும்.