கணவர் இறந்த பெண்கள் பூ வைத்துக்கொள்ளலாமா? தேசமங்கையர்கரசி கொடுத்த விளக்கம்.!

Published : Jul 24, 2025, 05:49 PM IST

பெண்கள் தலைக்கு பூ வைத்துக் கொள்வது வெறும் அழகுக்காக மட்டுமல்ல. அதன் பின்னால் ஆன்மீக, அறிவியல் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக மல்லிகை, ரோஜா போன்ற வாசனை உள்ள மலர்களுக்கு தனி சிறப்பு உண்டு.

PREV
15
பெண்கள் தலைக்கு பூ வைப்பது ஏன்?

இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் தலைக்கு பூச்சூடும் வழக்கம் இருக்கிறது. இது உலகின் பிற நாட்டுப் பெண்களிடம் காணப்படாத ஒரு தனி வழக்கமாகும். தலைக்கு பூ வைப்பது அழகு மட்டுமல்லாமல், பல நன்மைகளையும் கொண்டுள்ளது. இந்த பூக்களில் இருந்து வெளிவரும் நறுமணம் மனதை அமைதிப்படுத்தும் சக்தி கொண்டது. குறிப்பாக மல்லிகைப் பூவின் வாசம் கோபத்தை குறைத்து, மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி, நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மல்லிகைப் பூவை சூடி கொள்வது மன மகிழ்ச்சியை அதிகரித்து புத்துணர்ச்சியை தரும் என்றும், ஒருவித அமைதியான மற்றும் நேர்மறையான உணர்வை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது. மூளையின் பின்பகுதியில் உள்ள பினியல் சுரப்பி இடத்திற்கு அருகே பூக்களை வைக்கும் பொழுது அந்த சுரப்பி தூண்டப்பட்டு அதன் இயக்கம் சீராக்க உதவுவதாகவும், இது ஹார்மோன் சமநிலைக்கு உதவுவதாகவும் கூறப்படுகிறது.

25
பெண்கள் தலைக்கு பூ சூடிக்கொள்வதால் நன்மைகள்

தலைக்கு பூ சூடுவது என்பது மூளையில் உள்ள மேலும் சில சுரப்பிகளை தூண்டச் செய்கிறது. செரோட்டனின் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்களை வெளியிடும் சுரப்பிகள் நன்றாக செயல்படுவதற்கு மலர்களின் வாசனை உதவுகிறது. சில பெண்கள் பூச்சூடும் பொழுது அவர்களின் ESP சக்தி அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இது கூர்மையான மதிநுட்பத்தை குறிக்கிறது. சில பூக்களின் நறுமணம் குறிப்பாக மல்லிகை போன்ற பூக்கள் மனதை அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்தை பெற உதவுகிறது. தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்களுக்கும் பூக்கள் நன்மை பயக்கிறது. பூக்கள் பெண்களுக்கு ஒரு இயற்கையான அழகையும், கவர்ச்சியையும் சேர்க்கின்றன. இது தன்னம்பிக்கையை அதிகரித்து பெண்களை அழகாக உணர வைக்கிறது.

35
பூ வைப்பது என்பது கலாச்சாரத்தின் அடையாளம்

செம்பருத்தி, மல்லிகை, ரோஜா போன்ற பூக்கள் தலைமுடி ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது. நேரடியாக தலையில் சூடிக் கொள்வதை விட இந்த பூக்களின் சாறுகள் அல்லது எண்ணைகளை கூந்தலுக்கு பயன்படுத்தும் பொழுது முடி வளர்ச்சி, பளபளப்பு, பொடுகு நீங்குதல் போன்ற பலன்கள் கிடைக்கும். பூக்களின் குளிர்ச்சித் தன்மை உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஜாதி முல்லை, மல்லி போன்ற பூக்களை தினமும் சூடிக்கொடுப்பவர்களுக்கு மனம் ஒருமுகப்பட்டு தெளிவான முடிவுகளை எடுக்கும் திறன் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. பூச்சூடுவது என்பது தமிழ் பெண்களின் நீண்ட கால பாரம்பரிய மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இது கலாச்சார அடையாளத்தை பாதுகாக்கவும் அடுத்த தலைமுறைக்கு கலாச்சாரத்தை கடத்தவும் உதவுகிறது.

45
கணவர் இறந்தபின் பூ வைக்கலாமா?

ஆன்மீக ரீதியாக பெண்கள் தலையில் பூ சூடி கொள்வது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. மல்லிகை, ரோஜா போன்ற மலர்களை சூடுவதன் மூலம் மகாலட்சுமி தேவியின் அருள் பூரணமாக கிடைக்கும் என்றும், இதன் காரணமாக வீட்டில் செல்வமும் சுபிட்சமும் பெருகும் என்பது நம்பிக்கை. சில பெண்களுக்கு கணவர் இறந்த பின்னர் பூ வைக்கலாமா என்கிற சந்தேகம் எழுகிறது. இதற்கு விளக்கம் அளித்திருக்கும் ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி, இந்த கூற்று முற்றிலும் தவறானது என்றும் பிறந்த காலம் முதலே பூ என்பது ஒரு பெண்ணிற்கு சொந்தமானது. கணவர் இல்லை என்றால் பூ வைக்கக்கூடாது, பொட்டு வைக்கக் கூடாது என்று அந்த காலத்தில் கூறியது பெண்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதற்காக இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் எல்லா பெண்களும் எப்போதும் மலர்களை சூடிக்கொள்ளலாம் என விளக்கம் அளித்துள்ளார்.

55
அழகு மட்டுமல்ல அறிவியலும் நிறைந்துள்ளது

வீட்டில் இருக்கும் பெண்கள் இயல்பாகவே தலை பின்னி பூச்சூடி ஒரு நாளை தொடங்கினால் அது மிகவும் நல்ல நாளாக அமையும். தினசரி பூச்சூடுவதன் மூலம் மகிழ்ச்சியாக வாழலால். சிறு வயது முதலே பெண் பிள்ளைகளுக்கு பூச்சூடும் வழக்கத்தை பயிற்றுவிக்க வேண்டியது அவசியம். நறுமணம் நிறைந்த பூக்கள் இருக்கும் இடத்தில் ஏற்படும் மன மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனவே பெண்கள் தலைக்கு பூச்சுடுவது அழகு, ஆரோக்கியம் மற்றும் மனநலன் என பல விதங்களில் நன்மை பயக்கும் ஒரு பழக்கமாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories