வாரத்தின் செவ்வாய், வெள்ளியில் பெண்கள் தலைக்கு குளிக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. அதே போல் விசேஷ நாட்களிலும் பூஜையில் கலந்து கொள்ளும் போதும் தலைக்கு குளிக்க வேண்டும் என்பது ஐதீகம். தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
திங்கள் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் பொருள் சேருமாம். செவ்வாய் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் குடும்பத்திற்கு ஆகாது என்றும் புதன் கிழமை எண்ணெய் ஸ்னானம் செய்தால் கல்வி சிறப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. வியாழக்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்தால் அறிவு குறையும் என்றும் வெள்ளிக்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்தால் புகழ் சேரும் என்றும் கூறப்படுகிறது.
Moisturise your hair
நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் சனி தோஷம் விலகும் என்று நம்பப்படுகிறது. சனியினால் ஏற்படும் வாதம், முடக்கம், எலும்பு நோய்கள் நீங்கும். புதனால் ஏற்படும் தோல் சம்மந்தப்பட்ட நோய்களும் விலகுமாம். சூரியன், செவ்வாயால் ஏற்படும் உஷ்ணம் நீங்கும், முடி கொட்டுவது நின்று, முடி வளரத்தொடங்கும். உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வாரத்தில் இரண்டு நாட்களாவது எண்ணெய் ஸ்நானம் செய்வது நல்லது.