கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சாமி கோயிலில் ஒரே ஒருவர் மட்டும் தான் சாஷ்டாங்கமா நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி யாராவது நமஸ்காரம் செய்தால் அவர்களின் சொத்துக்கள் பத்மநாப சுவாமிக்கே சென்றுவிடும் என்றும் கூறுகின்றனர்.
குவோராவில் ரத்தினம் சேகர் என்பவர் இதுகுறித்து பேசிய போது “ கேரள மாநிலத்தில் பத்மநாபசுவாமி என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். அவரை வணங்கினால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இந்திய பேரரசில் அசோகர், சந்திரகுப்த மௌரியர், ஹர்ஷவர்த்தனர் என பல புகழ்பெற்ற மன்னர்கள் தமது சொத்துக்களை பல கோயில்களுக்கு தானமாக வழங்கி உள்ளனர். எதிரிகள் மற்றும் திருடர்களிடம் இருந்து பாதுகாக்க கோயில் நிர்வாகத்தினர் அந்த சொத்துக்களை சுரங்கம் வெட்டி அவற்றை பாதுகாத்து வந்தனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் சிதம்பரம், சீர்காழி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் என பல கோயில்களில் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டன. பத்மநாப கோயிலும் பல பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் உள்ள ஏழு பரசுராம சேஷத்திரங்களில் சித்தர்களாலும், முனிவர்களாலும் போற்றப்படுவது பத்மநாப கோயில்.
இந்த கோயிலில் 3 வாயில்கள் உள்ளது. இலுப்பை மரத்தடியில் யோக நித்திரை செய்யும் பத்மநாப சுவாமி கோயில் முதல் வாயிலில் அவரின் சிரத்தையும், சிவபெருமானுக்கு அருள் பாலிக்கும் பாவனையில் இருக்கும் வலது கரத்தையும் தரிசிக்கலாம்.
2-வது வாயிலில் பூமா தேவியும் திருமகளும் கூடிய பத்மநாபர், 3-வது வாயிலில் திருவடி தரிசனம் செய்யலாம். இந்த கோயிலுக்கு முன் ஒற்றைக்கால் மண்டபம் உள்ளது. இங்கு ஒருவருக்கு மட்டுமே சாஷ்டங்கமாக நமஸ்காரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி மன்னர் மார்த்தாண்ட வர்மா மட்டுமே இங்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்ய முடியும். அவரை தவிர வேறு யாரேனும் நமஸ்காரம் செய்தால் அவரின் சொத்துக்ககள் அனைத்து பத்மநாப சுவாமிக்கே சேர்ந்துவிடுமாம்
padmanabha swami temple
இதன் காரணமாகவே மன்னரின் சொத்து முழுவதும் பத்மநாப சுவாமி சொத்தாகவே இருக்கிறது. கோயில் கருவறையில் பத்மநாப சுவாமி நேர் கீழாக ஒரு சுரங்கம் உள்ளது. அதில் கிடைத்த பொக்கிஷமே பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையது. மூலவரின் தலைக்கு நேர் அடியில் அதை விட அதிகமான தங்க நகைகள் உண்டு என்று சொல்லப்படுகிறது.” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.