சொந்த வீடு, கார் வாங்க நினைத்து காரியம் தடைபடுதா? விதியை மாற்றி ராஜயோகம் தரும் எளிய பரிகாரம்..!

First Published | Mar 23, 2023, 9:38 AM IST

சொந்த வீடு, கார் வைத்து செழிப்பாக வாழ யாருக்குத்தான் ஆசை இருக்காது. எவ்வளவோ முயற்சி செய்தும் உங்களுக்கு அது நடக்கவில்லையா? கடவுள் அருள் இல்லாமல் இருக்கலாம். இந்த 2 மந்திரங்களை உச்சரிப்பதால் வாழ்க்கையில் இருந்து எதிர்மறை ஆற்றல் நீக்கி ராஜயோகம் உண்டாகும். 

ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு, கார் வாங்க வேண்டும் என்ற கனவு இருக்கும். சிலருக்கு எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் கிடைப்பதில்லை. ஒன்றன் பின் ஒன்றாக தடைகள் வந்துகொண்டிருக்கும். ஒருவேளை ஜாதகத்தில் கிரக பலம் இல்லாதபோதும், தெய்வ பலம் குறைவாக இருக்கும்போதும் இது போன்று நடக்கலாம். கிரக பலம், இறையருள் பெற ஜோதிடத்தில் பல வழிகள் உள்ளன. அதில் ஒன்று மந்திரம் உச்சரித்தல். 

 

கடவுள் மனம் குளிர பல மந்திரங்களும் பிற மத நடைமுறைகளும் வேதங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் இறை அருளையும், முன்னேற்றத்தையும் பெறலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள 2 மந்திரங்களும் உங்கள் அதிர்ஷ்டத்தை மாற்றும். உங்கள் விதியை மாற்றி ராஜயோகத்தை உருவாக்கவும், உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் தடைகள் வந்தாலோ அல்லது எதிரிகள் உங்களை தொந்தரவு செய்தாலோ, நீங்கள் சூரிய பகவானை வணங்க வேண்டும். அவரின் அருளால், விதியில் ராஜயோகம் உருவாகிறது. 

Tap to resize

முதல் மந்திரம் 

ஒவ்வொரு ஞாயிறு அல்லது சங்கராந்தி தினங்களில் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த நாள்களில் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்ரத்தை 1100 முறை பாராயணம் செய்யவும். இந்த ஸ்தோத்ரத்தை தினமும் 7 முறை அல்லது 11 முறை பாராயணம் செய்யவும். இதை செய்த பின் உங்கள் வாழ்க்கையில் வரும் அனைத்து தடைகளும் நீங்கும். எதிரிகளும் அமைதியடைவார்கள், மேலும் தொழில் வேகமாக வளர ஆரம்பிக்கும். சடங்கு முடிந்த அடுத்த 40 நாட்களுக்கு ஆதித்ய ஹிருதய ஸ்தோத்ரத்தை 108 முறை தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால், உங்கள் நிதி நிலை மேம்படும். நீங்கள் புதிய வீடு அல்லது கார் வாங்க விரும்பினால், இந்த மந்திரம் உங்களுக்கு உதவும். 

இரண்டாம் மந்திரம்  

வீட்டில் பில்லி சூனியம் ஏவல் மாதிரி ஏதேனும் எதிர்மறை ஆற்றல் இருந்தால் அதற்கு ராமரக்ஷா ஸ்தோத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும். இதனை சனிக்கிழமை, ராமநவமி, ஹோலி, தீபாவளி ஆகிய நாள்களில் 1100 முறை சொல்ல வேண்டும். அதன் பின் தினமும் 7 முறை பாராயணம் செய்ய வேண்டும். அது ஒரு மனிதனின் வாழ்க்கையில் வரும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கிறது. இதனால் அனுமனின் ஆசீர்வாதமும் கிடைக்கிறது. ஒரு நபரின் வாழ்க்கையில் வரும் அனைத்து எதிர்மறை ஆற்றல்களும் தானாகவே அழிக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: நம்ம கூடவே இருந்து குழி பறிக்கும், துரோகிகளின் சூழ்ச்சியில் சிக்காமல் இருக்க..சரபேஸ்வரரை எப்படி வழிபட வேண்டும்

இந்த இரண்டு மந்திரங்களையும் சொல்ல சில விதிகள் சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ளன. இந்த விதிகள் பின்பற்றப்படாவிட்டால், சடங்கு தோல்வியடையும். சடங்கின் போது நீங்கள் சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 

இந்த விஷயங்களை செய்யக் கூடாது..! 

1. கர்மகாலத்தின் போது முழுமையான பிரம்மச்சரியத்துடன் வாழ வேண்டும்.

2. முழு சாத்வீக உணவை உட்கொள்ள வேண்டும். இறைச்சி, மது, முட்டை, மீன், பூண்டு, வெங்காயம் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

3. அனைத்து வகையான போதைப் பொருட்களையும் (மது, புகையிலை போன்றவை) தவிர்க்க வேண்டும்.

4. இந்த சோதனைகள் யாருக்கும் தீங்கு விளைவிக்க ஒருபோதும் பயன்படுத்தப்படாது என்று சத்தியம் செய்ய வேண்டும். இந்த விஷயங்களை பின்பற்றாவிட்டால் மந்திரங்கள் சொல்லியும் பயன் கிடைக்காது. 

இதையும் படிங்க: கல்லீரல் கொழுப்பு பிரச்னை கூட சரியா போகும்.. காலையில் இந்த 2 ஜூஸ் குடித்து பாருங்க..நம்ப முடியாத நன்மை இருக்கு

Latest Videos

click me!