Ugadi Month Rasipalan: உகாதி மாத ராசிபலன்.. எந்தெந்த ராசிக்காரருக்கு என்னென்ன நடக்கும்..?

Published : Mar 22, 2023, 06:00 AM IST

உகாதி மாதம் இன்று தொடங்கும் நிலையில், உகாதி மாதத்திற்கான 12 ராசிகளுக்கான முழு பலன்களை பார்ப்போம்.  

PREV
112
Ugadi Month Rasipalan: உகாதி மாத ராசிபலன்.. எந்தெந்த ராசிக்காரருக்கு என்னென்ன நடக்கும்..?

மேஷம்: 

இந்த மாதம் தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும். பதவி உயர்விற்கான வாய்ப்புள்ளது. சுப நிகழ்ச்சிகளால் சுப செலவுகள் இருக்கும். தொழில், வியாபாரம் ரீதியாக தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வீட்டை புதுப்பிப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

212

ரிஷபம்:

திடீர் பணவரவு, செல்வாக்கு, புதிய பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அரசுப்பணிக்காக முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்கக்கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். வாகன மாற்றத்திற்கு ஏற்ற காலக்கட்டம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மனநிம்மதி இருக்கும். தொழில் நன்றாக இருக்கும். திடீர் லாபம் கிடைக்கும். அடகு நகைகளை மீட்டெடுப்பீர்கள். கோபத்தை மட்டும் தவிர்க்கவும்.
 

312

மிதுனம்:

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் - மனைவி இடையே நல்லுறவு இருக்கும். பெற்றோர்களும் ஆரோக்கியமாக இருப்பார்கள். புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. முக்கியமான பதவி, பொறுப்புகள் கிடைக்கக்கூடும். தொழிலில் லாபம் கிட்டும். 
 

412

கடகம்:

திடீர் பணவரவு கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். ஊதிய உயர்வு  கிடைக்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். அலைச்சல் குறைந்து நிம்மதியாக இருப்பீர்கள். வீடு, மனை வாங்குவது விற்பதில் கவனம் தேவை. பழைய கடன்களை அடைப்பீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் பங்குதாரர்களிடம் கவனமாக இருக்கவும். 

உகாதி பண்டிகை.. இதை மட்டுமே செய்தால் போதும்.. வறுமை நீங்கி வாழ்க்கை செழிப்பாக மாறும்..!
 

512

சிம்மம்:

உடல் ஆரோக்கியம் மிகச்சிறப்பாக இருக்கும். இந்த மாதம் சுறுசுறுப்பாக இயங்குவீர்கள். பணவரவு அதிகரிக்கும். அதனால் சிறிய கடன்களை எல்லாம் அடைப்பீர்கள். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலை தவிர்ப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம்.
 

612

கன்னி:

உடல் ஆரோக்கியமாக இருக்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். அதனால் மன நிம்மதி அடைவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. உங்களுக்கு பிடித்தமான சொத்து அமைய வாய்ப்புள்ளது. கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
 

712

துலாம்:

தொழிலில் பரபரப்பாக இயங்குவீர்கள். லாபமும் அதிகரிக்கும். புதிய கிளைகள், கடைகள் தொடங்கலாம். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் மீது வீண்பழி போட முயற்சிகள் நடக்கும். ஆனால் அதை வென்றுவிடுவீர்கள்.
 

812

விருச்சிகம்:

ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேங்கிக்கிடந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். வங்கிக்கடனுக்கு முயற்சித்தவர்களுக்கு இந்த மாதம் கடன் கிடைக்கும். பணிச்சுமை குறையும். பணியிடத்தில் முக்கியத்துவம் கிடைக்கும். இடமாற்றத்திற்கு வாய்ப்புள்ளது. கணவன் - மனைவி இடையே சிறு சிறு வாக்குவாதம் ஏற்படலாம். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
 

912

தனுசு:

உடல் ஆரோக்கியம் மிகச்சிறப்பாக இருக்கும். நிலுவையில் இருந்த வீடுகட்டும் பணிகள் மீண்டும் தொடர்வீர்கள். தேங்கிய வேலைகள் முடியும். திருமண பேச்சுவார்த்தைகள் நடத்தலாம். சிறிய விபத்துக்கான வாய்ப்புள்ளதால் முடிந்தவரை பயணங்களை தவிர்க்கவும். குறிப்பாக இரவுநேர பயணத்தை தவிர்க்கவும். கணவன் - மனைவி பரஸ்பரம் விட்டுக்கொடுத்து நடக்க வேண்டும். பதவி உயர்வு, வேலை மாற்றத்திற்கு வாய்ப்புள்ளது.

திருப்பதிக்கு இந்த நாள்களில் சென்று வழிபட்டால்.. நமது வேண்டுதல்கள் தப்பாமல் நிறைவேறும் தெரியுமா?
 

1012

மகரம்:

தன்னம்பிக்கை அதிகரிக்கும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். உடன்பிறந்தவர்களுடன் நல்லுறவு இருக்கும். திடீர் பணவரவு, செல்வாக்கு, பொறுப்பு ஆகியவை கிடைக்க வாய்ப்புள்ளது. அடகு நகைகள் சிலவற்றை மீட்டெடுப்பீர்கள். புதிய வாகனம் வாங்க வாய்ப்புள்ளது. தொழில் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் மதிப்பு உயரும். பூர்வீக சொத்து விவகாரங்கள் சாதகமாக முடியும்.  கணவன் - மனைவி நெருக்கம் அதிகரிக்கும். 
 

1112

கும்பம்:

மன உளைச்சல் நீங்கி மன அமைதி இருக்கும். வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் நடத்தலாம். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். வீடு வாங்கும் திட்டமிருந்தால் வாங்கலாம். 
 

1212

மீனம்:

மன பதற்றங்கள் நீங்கி மன நிம்மதி ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் விரிவாக்கத்திற்கு ஏற்ற காலக்கட்டம். நல்ல வீடு அமைய வாய்ப்புள்ளது. பூர்வீக சொத்து பிரச்னைகள் தீரும். பணிச்சுமை அதிகரிக்கும். கடின உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். நகைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.
 

Read more Photos on
click me!

Recommended Stories