Tamil updates ramadan 2023 date and full details: ரம்ஜான் எனும் ரமலான் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் முஸ்லீம் மக்களால் விமரிசையாகக் கொண்டாடப்படும். ரமலான் மாதம் பிரார்த்தனை, நோன்பு, பிரதிபலிப்பு, ஈகை ஆகியவற்றை வெளிப்படுத்தும் மாதம். இந்த ஆண்டு, இஸ்லாமிய புனித மாதமான ரமலான் மார்ச் 22ஆம் தேதி அன்று தொடங்குகிறது. சவூதி அரேபியாவில் ரமலான் மார்ச் 23ஆம் தேதி அன்று தொடங்குகிறது. ஈகைத் திருநாள் (Eid al-Fitr) ஏப்ரல் 21ஆம் தேதி வருகிறது. சந்திரனைப் பார்ப்பது புனித ரமலான் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
இஸ்லாமிய நாட்காட்டியின் 9ஆவது மாதமான ரமலான் மாதத்தில், குர்ஆன் வானத்திலிருந்து பூமிக்கு வந்ததாக நம்பப்படுகிறது. இந்த மாதத்தில் இருக்கும் நோன்பை மரியாதைக்குரிய அடையாளமாக இஸ்லாமியர்கள் கடைபிடிக்கின்றனர். மக்கள் தங்கள் ஆன்மாக்களை தூய்மைப்படுத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கருணையைப் பெற இந்த மாதத்தில் நோன்பு நோற்பார்கள்.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு இந்த பண்டிகை மிகவும் புனிதமானது. இந்த மாதத்தில் அசுத்த எண்ணங்களில் விலகி நல்லெண்ணங்களில் மனதை செலுத்த வேண்டும். தினமும் சூரிய உதயத்திற்கு முன்பு தொடங்கி சூரிய அஸ்தமனம் வரை ஒரு மாதம் நோன்பு வைப்பார்கள்.
சூரிய உதயத்திற்கு முன் சாப்பிடும் உணவை சஹர் எனவும், சூரிய அஸ்தமனத்திற்குப் பின் சாப்பிடும் உணவை இஃப்தார் எனவும் சொல்கிறார்கள். பலர் பாரம்பரிய வழக்கப்படி பேரீச்சம்பழத்தை உண்டு நோன்பை முடிப்பார்கள். நாள் முழுவதும் உணவு இல்லாமல் நீண்ட காலத்திற்கு இருக்க இந்த சஹர் எனும் அதிகாலை உணவு தான் ஊட்டமளிக்கிறது. மாலையில் இரவு உணவுடன் நோன்பு முறிக்கப்படுகிறது. இதை இப்தார் என்று அழைக்கிறார்கள். ஆனால் பலருக்கும் நீண்ட நேரம் உண்ணாவிரதம் இருப்பது மிகவும் கடினம். அதனால்தான் உடலுக்குத் தேவையான சத்துக்களைப் பெற ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.
ரமலான் நோன்பு செய்யக் கூடாதவை..!
•பகலில் நோன்பு இருப்பவர்கள் அனைவரும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
• நோயால் அவதிப்படுபவர்கள், தாய்ப்பாலூட்டும் பெண்கள், பயணிகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், மாதவிடாய் உள்ளவர்கள் நோன்பு இருக்கக்கூடாது.
•ஈத் தினத்தன்று புதிய ஆடைகள் அணிந்து, நமாஸ் செய்து, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு ஒன்றாகச் சாப்பிட்டு, 'ரம்ஜான் முபாரக்' வாழ்த்துக் கூறி இந்தப் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க: protein: புரதச்சத்து நினைச்சத விட அதிகம் கிடைக்கணுமா? காலையில் இந்த உணவுகள் போதும்..!